ஹஸன் அலி,அன்சில் கூட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாதவர்களாக காணப்பட்ட மும்மூர்த்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த மும்மூர்த்திகள் இவர்கள்தான். முதலாமவர் யஹியாகான். இவர் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாம். இரண்டாவது நபர் முழக்கம் மஜீத் இவர் கட்சியின் மூத்த போராளியும் தவிசாளருமாம். மூன்றாவது நபர் பிர்தௌஸ். இவர் கட்சியின் சாய்ந்தமருதுக்கான அமைப்பாளராம்.

இந்த மும்மூர்த்திகளும் அண்மையில் சா்யந்தமருதுவில் நடைபெற்ற ஹஸன் அலி, அன்சில் கூட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாதவர்களாக காணப்பட்டனர்.

சாய்ந்தமருது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று கூறப்படும் நிலையில் அந்தக் கோட்டைக்குள் நுழைந்து கொடி கட்டி கூட்டம் நடத்திய ஹஸன் அலி, அன்சிலை இவர்களைத் தடுக்க முடியாது போய்விட்டதோ?

எந்த அரசியல் கட்சியும் எங்கும் கூட்டங்களை நடத்துவது அவர்களது உரிமை. அதனை எவரும் தடுக்க முடியாது. அது ஜனநாயகமாகாது என இவர்கள் யதார்த்தவாதிகளாக மாறி கருத்துக் கூறினாலும் அதனையும் ஏற்க முடியாது.

ஏனெனில் கட்சியின் புதிய தவிசாளர் முழக்கம் மஜீத் ஒரு சாவல் விட்டிருந்தார். அதாவது ஹஸன் அலி, அன்சில் கூட்டத்தை சாய்ந்தமருதில் நடத்திப் பார்க்கட்டுமே என்று. அவர்கள் நடத்தித்தான் காட்டி விட்டார்கள். மஜீதினால் தடுக்க முடியாது போய்விட்டதே.. இந்த நிலையில் நான் முழக்கம் மஜீதாக இருந்திருந்தால் தவிசாளர் பதவியிலிருந்து எப்போதோ ராஜினாமா செய்திருப்பேன்.

AH.சித்தீக் காரியப்பர்