இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 50 கி.கி வெடிகுண்டு: செயலிழக்க வைக்க முயற்சி!

An Army expert checks the fuse on a Second World War bomb found in Bermondsey, south-east London, in March

இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 50 கி.கி வெடிகுண்டு: செயலிழக்க வைக்க முயற்சி

இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட 50 கிலோகிராம் எடைகொண்ட வெடிகுண்டு லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு லண்டனில் உள்ள வெம்ப்ளே பகுதியில் பிரபலமான வெம்ப்ளே கால்பந்து மைதானம் உள்ளது. இதனருகே கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டைப் பரிசோதனை செய்த பொலிஸார், அது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிக்காத குண்டு என கண்டறிந்துள்ளனர். 50 கிலோகிராம் எடைகொண்ட அந்தக் குண்டை செயலிழக்க வைக்கும் வேலையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 400 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 _83160394_34bda536-259e-4590-9af0-ad3fc8dec702