சூரிய சக்தியில் செயற்படும் பசுமை நகரம் துபாயில் உருவாக்கம் !

துபாய் லேண்ட் பகுதியில் சூரிய சக்தியில் செயற்படும் சஸ்டைனபில் சிட்டி (sustainable-city) எனும் பசுமை நகரம் உருவாக்கப்படவுள்ளது.

50 இலட்சம் சதுர அடியில் அமைய உள்ள இந்நகரம், 10,000 மரங்களோடு 500ற்கும் மேற்பட்ட பசுமை வீடுகள், பசுமை பள்ளி, ஆராய்ச்சிக்கூடம், அருங்காட்சியகம், சூரிய சக்தி நிலையம், விவசாயப் பண்ணைகள், புல்வெளிகள், கழிவுநீர் மறுசுழற்சி என 100 சதவீதம் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படவுள்ளது.

மேலும், புகழ்பெற்ற இண்டெர்காண்டினென்டல் ஹோட்டல் நிறுவனம் 170 அறைகளோடு இங்கு மிகபெரிய ஹோட்டலை 2017 இல் திறக்க திட்டமிட்டுள்ளது. 100 சதவீத சோலார் சக்தியில் இயங்கும் உலகின் முதல் ஹோட்டலாக இது திகழும். இங்கே உள்ள வாகனங்களும் சூரிய ஒளியில் இயங்கும்.

இப்பணிகள் நிறைவடையும் போது இப்பகுதி முழுவதும் பசுமையாகக் காணப்படும்.

28D9797600000578-3087751-image-a-46_143204177342328D9798900000578-3087751-image-a-38_143204077028728D9799100000578-3087751-image-a-34_143204071171628DA2C1200000578-3087751-image-a-40_1432040774604