மு.கா. தலைவர் மதிப்பிழந்து வருகிறார்: மாஜி நாடாளுமன்ற அங்கத்தவர் சிறப்பு செவ்வி

 

 

(தமிழகத்திலிருந்து வெளிவரும் கொடைக்கானல் அரசியல் மாத சஞ்சிகையின் பங்குனி மாத இதழுக்கு இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் முன்னணி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவருமான முத்தலிபாவா பாரூக் வழங்கிய செவ்வி)

இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள மன்னார் தீவின் நகரத்தில் பெரிய கடையில் அமைந்துள்ள அவரது வக்கீல் அலுவலகத்தில் மாஜி நாடாளுமன்ற உறுப்பினரும் வக்கீலும், அரசியல் விமர்சகருமான  முத்தலிபாவா பாரூக்கை சந்தித்தோம். பரபரப்பான ஜரூரான நிலையிலும் எம்மை மிகவும் அன்பாக வரவேற்று உபசரித்தார். இனிமையாகப் பேசினார்.

கேள்வி – இலங்கை அரசாங்கம் தீர்வு முயற்சிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதெனக் கருதுகின்றீரா?

பதில் – அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்வு முயற்சிகள் இன்னும் முன்னேற்றகரமான நிலையில் இல்லை. இந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட “கொன்ஸ்டிடியுசனல் கவுன்சிலில்” மைனோரிட்டி சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் அங்கம் வகித்து வருகின்ற போதும் அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.

கவுன்சிலுக்கிடையே கருத்து வேறுபாடுகள் இன்னும் சீர் செய்யப்படவில்லை.

கேள்வி – மைனோரிட்டி மக்களுக்கு நன்மை கிடைக்குமென நீங்கள் நம்பவில்லையா?

பதில் – இழுபறி தொடர்வதால் வெற்றியளிக்குமென நான் நம்பவில்லை. 

கேள்வி – முட்டுக் கட்டைக்கான காரணம் என்ன?

பதில் – கடும்போக்குக் கொள்கையுடைய சிங்களத் தீவிரவாதம் மேலோங்கியுள்ளது.

கேள்வி – இலங்கையின் தமிழர் வாழும் பிரதேசங்களான வடக்கையும், கிழக்கையும் மேர்ஜ் பண்ணுவது தொடர்பில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன?

பதில் – இலங்கை முஸ்லிம் காங்கிரஸிற்கோ, அதன் தலைவருக்கோ இது தொடர்பில் தெளிவான நிலைப்பாடு இல்லை. என்னைப் பொறுத்த வரையில் நான் மேர்ஜை எதிர்க்கிறேன்.

கேள்வி – இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் படியுடீனும் மேர்ஜை எதிர்ப்பதாக கூறியுள்ளாரே?

பதில் – அவரது ஸ்டேண்ட் சரியானதெனவே நானும் நம்புகின்றேன்.

கேள்வி – முஸ்லிம்களுக்கென அரசியல் தீர்வுத் திட்டம் ஏதும் தயாரித்துள்ளீர்களா? 

பதில் – எங்கள் கட்சி அவ்வாறான முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

கேள்வி – உங்கள் கட்சியில் நிறைய வக்கீல்கள் இருக்கிறார்களே?

பதில் – உண்மைதான், ஆனால் அவர்கள் மழைக்குக் கூட கோர்ட்டு வாசலுக்கு சென்றவர்கள் இல்லை.

கேள்வி – இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளனவே?

பதில் – அவர் தற்போது மதிப்பிழந்து வருகின்றார்.

கேள்வி – வில்பத்து சரணாலய கெசட் தொடர்பில் பெரிய பிரளயம் கிளம்பியுள்ளதே?

பதில் – முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதியை அரசாங்கம் அடாத்தாக வனப்பகுதிக்கு சொந்தமாக்கியுள்ளது.

“அவருடன் கொடைக்கானல் மேற்கொண்ட இனிய செவ்வியின் பின்னர் விடைபெற்றோம்….

– செவ்வி – கோகுலன்