முதல் சம்பளத்தை தேசிய பூங்காக்கள் அபிவிருத்தி பணிகளுக்கு நன்கொடையாக வழங்கிய டிரம்ப்

 

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவாகிய பின், பெற்றுக்கொண்ட முதல் சம்பளத்தை, நாட்டின் தேசிய பூங்காக்கள் அபிவிருத்தி பணிகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். 

 

கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றால் அரச நிதியிலிருந்து தனக்கு அளிக்கப்படும் சம்பளம் முழுவதையும் பொதுப்பணிக்களுக்கு நன்கொடையாக அளிப்பேன் என டொனால்ட் டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் ஆண்டு சம்பளமாக 4 இலட்சம் டொலர்களிலிருந்து முதலாவது காலாந்திற்கான சம்பளமாக வந்த 78 ஆயிரத்து 333 டொலர்களை நாட்டின் தேசிய பூங்காக்கள் அபிவிருத்தியிருக்காக நன்கொடையாக அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.