தென்கொரியா நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று பிரேசில் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு நியூசிலாந்து அருகே உள்ள மார்சல் தீவுக்கு சென்று கொண்டு இருந்தது.
இந்த கப்பல் 2 லட்சத்து 60 ஆயிரம் டன் சரக்குகளை ஏற்றக்கூடிய மிகப்பெரிய கப்பல் ஆகும். கப்பலில் 24 ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 16 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டையும், 8 பேர் தென் கொரிவையும் சேர்ந்தவர்கள்.
கப்பல் பிரேசில் நாட்டில் இருந்து புறப்பட்டு தென் அமெரிக்க கண்டத்தை தாண்டி செல்லும் வகையில் கீழ் பகுதியை நோக்கி வந்து கொண்டு இருந்தது. உருகுவே அருகே வந்த போது திடீரென கப்பல் மாயமாகி விட்டது.
எனவே, அந்த பகுதிக்கு மீட்பு படையினர் அனுப்பப்பட்டன. அப்போது கடலில் பாதுகாப்பு சாதனத்துடன் மிதந்து கொண்டு இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டினர் 2 பேரை மீட்டனர். அந்த இடத்தில் கப்பல் மூழ்கி இருக்க கூடும் என கருதப்படுகிறது. மீட்பு பணிக்காக விசேஷ கப்பல் அனுப்பப்பட்டுள்ளன.
மொத்தம் பயணம் செய்த 24 பேரில் 2 பேர் மீட்கப்பட்டுள்ளதால் மற்ற 22 பேருடைய கதி என்ன? என்று தெரியவில்லை.