புதிய அரசியலமைப்புக்கான மக்கள் கருத்து வாக்கெடுப்பு நல்லாட்சி அரசாங்கத்துக்கு கடினமான திருப்பமாக இருக்குமெனினும் அது நூறு வீதம் வெற்றிபெறக்கூடிய ஒரு இலக்காகும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசியலமப்புக்கான மக்கள் கருத்துக்கணிப்பு பிரக்சிட் போன்ற சர்வதேச நிகழ்வுகளால் பிழையான பார்வைக்கு இட்டுச்சென்றிருந்தாலும் புதிய அரசியலமைப்பு மக்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை மக்கள் நன்கு அறிந்திருந்தால் அவ் அரசியலமைப்பு நிறைவேற்றம் தொடர்பில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமிருக்காது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.