இன்று எமது சிறுபான்மைச் சமூகமான வடபுல உறவுகளின் இருப்பிட உரிமைக்கும், கல்வி கற்கும் உரிமைக்கும், மார்க்க உரிமைக்கும் அரச-கோவையினால் சட்டம் நிறை வேற்றிய நல்லாட்சிக்கு 95% வாக்குப் பிச்சை அள்ளி தந்த கல்முனை தொகுதி மண் சொந்தக்காறன் என்ற வகையில் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன், இக் கொடுமைகளை சர்வதேசத்திற்கு ஒரு இயற்கமாய் அறிக்கை விடுகின்றேன்.
அல்லாஹு அக்பர்…..
ஏன் இந்த வடபுலத்தின் அவலம்?
வடபுல சிறுபான்மை மக்களை நாம் தங்குதடை இன்றி குடியேற்றுவோம் என வாக்குறுதி தந்த இல்ல நல்லாட்சி டயஸ்போராவின் சர்வதேச வலைப்பின்னலுக்குள் அகப்பட்டு வாகுறுதிககையும், ஒபந்த்கங்ககையும் உதாசீனம் செய்யும் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் போன்றோர் உலகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
தனிநாடு வேண்டும் என்றோ!
புலிகளுக்கு உளவாளிகளாகவோ!
அரச படைகளை காட்டிக் கொடுக்கவோ!
இளைஞ்ஞர்கள் ஆயுதங்கள் ஏந்தவோ!
மறுத்ததன் ஒரே ஒரு காரத்தினால் மட்டுமே…
இந்த அப்பாவி வடபுல உறவுகளை 500/ரூபாய் கை செலவு கொடுத்து ஒலி பெருக்கி மூலம் நாஷிச புலிகளால் கொடூரமான முறையில் வெளியேற்றப் பட்டார்கள். இதனால் அகதி என்ற பெயரை தன் தோளில் சுமந்து கொண்டு 27 வருடங்களாக இருப்பிட உரிமை தேடி அலைந்த உறவுகளுக்கு, குடியேறும் தடையை அரசு அவசர அவசரமாக சட்டமாக்கியதன் மர்மம்தான் என்ன?
வடபுலத்தில் தற்போது 7 பாராளமன்ற உறுப்பினர்களாக அதிகரிக்கப் பட்டது என்பது குறிபிடதக்கது, அதன் மூலம் வடபுலத்தில் வெளியேற்றப் பட்ட முஸ்லீம்கள் மீண்டும் குடியேறினால் அவர்களது பழைய வாக்கு வங்கியை விட பல்லாயிரம் வாக்குகள் வடபுலத்தில் பதியப் படும் என்ற ஒரே ஒரு அரசியல் தந்திர நோக்கத்தினால் இந்த குடியேற்றத் தடையை டயஸ்போரா முன் வைக்க, அதனை இந்த நல்லாட்சி அமுல் படுத்துகின்றது.
நல்லாட்சியின் பங்காளிகளே!
நாம் எதைக் கேட்கின்றோம் என நல்லாட்சியிடம் கூறியும், அது ஒரு கண் துடைப்பு விந்தையாக மாற்றபட்டது. இன்னும் நீங்கள் எம் சமூகத்தின் முதுகில் அடிமைச் சாசணம் எழுதவா காத்திருக்கின்றீர்கள்? இந்த நல்லாட்சி அரசுக்கு
65000 வீடுகள் கட்டுவதற்கு பணம் சேர்த்தவர்களும் எம்மவர்களே! எங்கே அந்த வீடுகள்? எங்கே அந்த வாக்குறுதிகள்?
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அமைச்சர் அவர்கள் ஒரு அகதியின் உணர்வை அனுபவித்ததனால் அந்த வடபுல உறவுகளுக்காக தட்டத் தனியே 15 வருடங்களாக போராடிய போதெல்லாம் ஹக்கீம் காங்கிரஸ் கம்பனியும், ஏனைய முஸ்லீம் சேனாக்களும் கை கட்டி மெளனியாக இருந்து கொண்டு விமர்சனங்கள் அள்ளி வீசியதையும், காட்டிக் கொடுப்புகளையும் வடபுல மக்கள் ஞாபகத் தன்மையோடு பொறுமையாக அவதானித்துக் கொண்டிருந்தார்கள். இதற்கு
நோர்வேயின் பண பரிமாற்றம் ஒரு பங்கையும் கொண்டுள்ளது.
எம் சமூக உணர்வாளர்களே!
சிலருடைய பேனாக்களின் கருத்துக்களைப் பார்க்கின்ற போது கார்ப்புணர்சியாகவும், காட்டிக் கொடுப்பாகவும் இருக்கின்றது. இவைகளை உடனடியாக நிறுத்திக் கொண்டு எம் வடபுல உறவுகளுக்காய் வெள்ளிக் கிழமை நாம் ஒன்று கூடும் அல்லாஹ்வின் வீட்டில் இந்த மக்களுக்காய் துவா செய்வோம், நல்லாட்சி அரசுக்கு எச்சரிக்கையிடுவோம்.
எம் சர்வதேசமே…..
ஒரு சமூகத்தின் இருப்பிட உரிமை, ஐ.நா. சபையில் ஒரு முன் ஆவண சட்டமாக இருந்தாலும் கூட அது முஸ்லீம் சமூகம் என்றால் மறைக்கப் படுகின்றன.
எம் சர்வதேசமே……
இனி உன்னிடம் நீதி கேட்டு நாம் சர்வதேச சங்கிலிப் போராட்டத்தை தொடங்க வேண்டி உள்ளது.
எம் புலம்பெயர் இலங்கை முஸ்லீம்களே!
உங்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கின்றோம்,
உங்கள் போராட்டங்களை வரவேற்கின்றோம்,
உங்கள் தன்மானத்தைப் போற்றுகின்றோம்,
எமது இந்த வடபுலத்தின் மீள்குடியேற்றத்திற்கான சவால்களை நீங்கள் நீங்கள் வாழும் நாட்டின் அரசுக்கு எழுத்து மூல அறிக்கையிடுங்கள்,
அதன் விளைவை எம் நல்லாட்சிக்கு சமர்பணம் செய்யுங்கள்….
அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்,
அல்லாஹு அக்பர்