க.கிஷாந்தன்
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரநாயக்கபுர வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்று தானாக இயங்கி இஜிராபுர வீதியின் பக்கம் வேகமாக சென்று ஆசிரியை ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியை டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் 30.03.2017 காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
ஆட்டோ சாரதி ஆட்டோவின் கைத்தடையினை இழுத்து விட்டு வீதியோரத்தில் ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அப்போது கைத்தடை தளர்ந்து ஆட்டோ வேகமாக பள்ளத்தை நோக்கி சென்றுள்ளது.
அதன் போது வீதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியர் மேல் மோதி ஆட்டோ வீட்டின் கூரையொன்றின் மீது வீழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் ஆசிரியர் காயமடைந்துள்ளதுடன் ஆட்டோ மற்றும் வீடு சிறிய அளவில் சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.