சூத்திரதாரிகளை இறை நீதி அரச நீதியை உபயோகித்து தண்டிக்கும் – பஷீர் சேகு தாவூத்

1) தானே தலையில் மண்ணள்ளி
வைத்தல்
2) நுழலும் தன் வாயால் கெடும்
3) கெடுவான் கேடு நினைப்பான்
4) கிணறு வெட்டப் பூதம் வெளிவந்த கதை
எனப் பல கிராமிய சொலவடைகளை அறிந்திருக்கிறோம். இவற்றிற்கு உதாரணமாக அண்மையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.


அதாவது, தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் என்ற தலைப்பில் வெளிவந்த ஆவணத் தொகுப்பை அச்சிட்ட அச்சகம் என்று சந்தேகப்பட்ட நிறுவனத்துக்கு எதிராக கொழும்பு குற்றத் திணைக்களத்தில் இருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்தனர். இத்தொகுப்பில் பொய்யான தகவல்களைத் தெரிவித்து எங்கள் பெயருக்கும், கட்சியின் நற் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், இவ் ஆவணத் தொகுப்பில் அச்சிட்டவர்களின் பெயரோ, அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ குறிப்பிடப்படவில்லை என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடைபெற்று வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது.இவ்வழக்கு விசாரணையின் முதல் தவணையில் யாரும் எதிர்பாராத வகையில் கௌரவ நீதிபதி அவர்கள் இத்தொகுப்பில் உள்ளடங்கியுள்ள ஆவணங்களைப் பற்றியும் அதன் உண்மைத் தன்மை பற்றியும் விசாரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணை தொடங்கும் போது பொது ஆவணங்கள் அனைத்தும் உண்மை என்று நிரூபணமாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அப்போது உண்மைகள் என்று பொலிசாலேயே அத்தாட்சிப்படுத்தப்பட்டு நீதி மன்றுக்குத் தெரிவிக்கப்படும்.இத்தருணத்தில், சூத்திரதாரிகளை இறை நீதி அரச நீதியை உபயோகித்து தண்டிக்கும். புத்தகத்தை மேலெழுந்தவாரியாகவே நீதிமன்று அலசும் என்று எதிர்பார்த்தவர்கள் அகப்பட்டுள்ளனர்.அல்லாஹ் போதுமானவன்.

 

பஷீர் சேகு தாவூத் 

முன்னாள் அமைச்சர்