அடுத்த ஆண்டு ஆரம்பிக்கவிருக்கும் ஒலிம்பிக் போட் டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இங்கிலாந்தில் இருந்த ஒலிம்பிக் போட்டிக்கான வளை யம் தற்போது பிரேசிலில் மையம் கொண்டுள்ளது.
பிரேசில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத் தவிருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகிறது.
பிரேசிலில் உள்ள ரியோடி nஜனிரோ நகரில் 2016 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.
இதற்காக கப்பல் மூலம் இங்கிலாந்தில் இருந்து பிரமா ண்டமான ஒலிம்பிக் வளையம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனை மடுரெய்ரா என்ற பு+ங்காவில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது சர்வதேச ஒலிம்பிக் குழுவின் ஒருங்கிணைப்புத் தலைவர் நேவல், ரியோ நகர மேயர் மற்றும் ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச் சியில் கலந்து கொண்டனர். அப்போது இடம்பெற்ற வான வேடிக் கைகளால் அந்த பகுதி அதிர்ந்தது.
ஒலிம்பிக் போட்டியை வரவேற்க காத்திருக்கும் பிரேசில் நகர வாசிகள், இந்த நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து கொண்டாடியதுடன் ஆடி, பாடி தங்களது மகிழ்ச் சியை வெளிப்படுத்தினர். பிரேசிலில் 31 ஆவது ஒலிம்பிக் போட்டி 2016 ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பிக்க வுள்ளமை குறிப்பிடத்தக்கது.