எத்தகைய தடை வந்த போதும் 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் அதற்காக அரசாங்கத்தில் தொடர்ந்து இணைந்திருப் பதாகவும் அரசாங்க த்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோர் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க,
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19 ஆவது திருத்தத்தையும் தேர்தல் முறையை மாற்றும் 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்றும் நோக்கத்துடனே நாம் அரசாங்கத்துடன் இணைந்தோம். ஜனாதிபதியின் வேண்டுகோள்படி அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றோம். எம்மோடு அமைச்சு பதவிகளை ஏற்ற 4 சு.க. அமைச்சர்கள் பதவி விலகியது 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற தடையாக இருக்காது 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற சுதந்திரக் கட்சி முழு ஒத்துழைப்பு வழங்கும்.
20 ஆவது திருத்தம் தொடர்பில் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் ஜனாதிபதி அமைச்சரவை உபகுழு வொன்றை நியமித்தார்.
ஐ.தே.க. ஏற்படுத்தும் இடையூறுகளுக்கு மத்தியில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
4 அமைச்சர்கள் பதவி விலகியது சுதந்திரக் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஜனாதிபதியுடனான பிரச்சினை காரணமாக அவர்கள் பதவி விலகவில்லை. ஐ.தே.க. அமைச்சர்களின் நடவடிக்கைகள் காரணமாகவே அவர்கள் விலகியுள்ளனர்.