ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அலஹப் பெரும, குமாரவெல்கம, மனுஷ நாணயக்கார ஆகியோர் எற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அபயாராம விகாரையில் நடை பெற்றது.
அரசாங்கத்திலுள்ள ஏனைய சுதந்திரக் கட்சி அமைச்சர்களும் பதவி விலகவேண்டும் என ஐ.ம.சு.மு கோரிக்கை விடுத் துள்ளது. கட்சியினுள் ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் 4 அமைச்சர்கள் பதவி விலகியதை வரவேற்றுள்ள ஐ. ம. சு. மு ஏனையவர்களும் அந்த வழியை பின்பற்றவேண்டுமென தெரிவித்துள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த டளஸ் அலஹப் பெரும,
எம்.பி 4 எம்.பிக்கள் சகல சலுகைகளையும் கைவிட்டு மீண்டும் எதிர்க் கட்சியுடன் இணைந்துள்ளதை வர வேற்கிறோம். எமது கோரிக்கையை ஏற்று உள்ளூராட்சி சபைகளின் காலத்தை நீடிக்காத நிலையில் அவர்களுக்கு தொடர்ந்து அரசில் இருப்பது சவாலான விடயமாகும். மனசாட்சிக்கு பயந்து அவர்கள் விளகியுள்ளனர்.
அரசாங்கத்திலுள்ள ஏனைய அமைச் சர்களும் அந்த வழியை பின்பற்றுவார்கள் என நம்புகிறோம்.
யானைக்கும் அங்குசத்திற்குமுள்ள தொடர்பே இரு கட்சிகளுக்குமிடையில் இருக்க வேண்டும். ஆனால் தற்பொழுது யானைக்கும் விலாங்காயிற்குமுள்ள தொடர்பே காணப்படுகிறது.
கட்சி மத்திய குழுவின் முடிவு படியே சு. க அமைச்சர் பதவிகளை ஏற்றது. கூட்டரசாங்கத்தில் சு. க. வின் சுய கெளரவம் பாதுகாக்கப்படவேண்டும். அரசாங்கத்திலிருந்து விலக சு. க அமைச் சர்களுக்கு உரிமையிருக்கிறது.
இவர்கள் பதவி விலகியது ஜனாதிபதிக்கு எதிரான முடிவல்ல. சு. க வை பல வீனப்படுத்த பல்வேறு மட்டங்களில் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்றார்.