அதாஉல்லா தலைமையிலான குழுவினர் கிண்ணியா சென்றனர்

டெங்கு நோயினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கிண்ணியா,மூதூர் பிரதேசங்களுக்கு தேசிய காங்கிரஸின் தலைவர்எ.எல்.எம் அதாஉல்லா உள்ளிட்ட  உயர் மட்ட குழு விஜயம் மேற் கொண்டிருக்கின்றனர்.

 ஏற்கனவே தேசிய காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளர் வைத்தியர் சியா தலைமையிலான
அணி அங்கு டெங்கு நோய் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழலில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் கிழக்குமாகாண எதிர்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மூத்த துணைத் தலைவர் வைத்தியர் உதுமாலெப்பை  கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளர் வைத்தியர் சியா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சமுகமளித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.