ஹக்கீம் இம்முறை இழைத்திருப்பது இஸ்லாத்தில் கல்லெறிந்து கொல்லும் குற்றம் அல்ல கழுத்தை வெட்டிக்கொல்லும் குற்றம்

(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)

ஆவியை விரட்டிய பாவி

ஹக்கீம் எமது முஸ்லீம் சமூகத்தைத் தலைமை தாங்கி நடாத்துவதற்குத் தகுதியும்,திராணியும் அற்றவர் என்பதனை மூன்று வழிகளில் நிரூபிக்கப் போவதாக நான் கூறியிருந்தேன்.

01. ஒழுக்க ரீதியாக
02. அகீதா ரீதியாக
03.அரசியல் ரீதியாக

ஹக்கீம் ஒரு பெண்ணோடு அல்ல பல பெண்களோடு விபச்சாரம் செய்தவர் என்பதனை 10 அத்தியாயங்களினூடாக நிரூபித்திருந்தேன். ஹிஜாபைப் பேணும் ஒரு முஸ்லீம் சமூகத்திற்கு ஒரு விபச்சாரன் ‘கவ்வாமாக’ (பொறுப்புதாரி) இருக்க முடியாது.ஒழுக்க ரீதியாக ஹக்கீம் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியற்றவர் என்பதை நிரூபிக்க அவை போதுமானவை.
இம்முறை ஹகீம் அகீதா ரீதியாக நெறிபிறழ்ந்தவர் என்பதை இந்த சிறிய தொடர் நிரூபிக்க முனைகிறது.

ஹக்கீம் விபச்சாரத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. இறையச்சம் இல்லாதவர்கள் செய்யும் ஒரு பாவம் இன்னொரு பாவத்திற்கு இட்டுச்செல்வது போல ஹக்கீமின் மதுப்பழக்கம் விபச்சாரத்திற்கும், விபச்சாரம் அதை விடப் பயங்கரமான இணைவைப்பிற்கு இட்டுச்சென்றுள்ளது என்பதனை இந்தப் பதிவு நிரூபிக்கும். இந்த முறை தேசியத்தலைவர் இழைத்திருப்பது இஸ்லாத்தில் கல்லெறிந்து கொல்லும் குற்றம் அல்ல கழுத்தை வெட்டிக்கொல்லும் குற்றம்.

இதுதான் நடந்தது.

குமாரி கூரே ஹக்கீமின் வீட்டிற்கு முன்னால் எரிந்து இறந்ததன் பின்னர் ஹக்கீம் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தார். அவர் இறந்து சில நாட்களுக்குப் பின்னர் ஹக்கீமின் படுக்கையறையில் இருந்த கட்டில் தானாக ஆடத்தொடங்கியது.அது ஹக்கீமின் ஒரு மனப்பிரமையாகக் கூட இருக்கலாம்.அல்லது தான் திருமணம் முடிப்பதாகச் சொல்லி ஏமாற்றியதுதான் குமாரியின் தற்கொலைக்குக் காரணம் என்ற ஒரு குற்ற உணர்வாக இருக்கலாம்.அல்லது ஷைத்தானின் வஸ்வாசாகக் கூட இருக்கலாம்.

இப்படியான பிரமைகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஒரு முஸ்லீம் என்ன செய்யவேண்டும், எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று தெள்ளத் தெளிவாக இஸ்லாம் சொல்லித்தந்திருக்கிறது.இஸ்லாமிய வழிமுறைகளை விட்டு வேறுவழிகளில் தீர்வு தேடுவது சில சமயங்களில் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றிவிடும்.

ஹக்கீம் தனது கட்டிலை ஆட்டுவது குமாரியின் ஆவிதான் என்று நினைத்துவிட்டார்.செத்த பிறகும் ஆவியாக வந்து குமாரி தன் கட்டிலை ஆட்டுகிறாள் என்று பயந்தார் அந்தப் படித்த பாமரன்.

என்ன செய்வது.ஆவியை விரட்ட வேண்டும்.
ஆவியை எப்படி விரட்டுவது?

இலங்கை முஸ்லீம்களின் அரசியல் தலைவர் ஆவியை விரட்ட எடுத்த ஆயுதம் ஆயதுல் குர்சி அல்ல.சூறா பகரா அல்ல.சூறா ஸாப்பாத்தும் அல்ல.அதானும் அல்ல இகாமதும் அல்ல.

அவர் கையேந்தியது அண்ட சராசரங்களை அடக்கியாளும் அந்த றப்புல் ஆலமீனை அல்ல.ஹக்கீமையும் படைத்து,குமாரியையும் படைத்த ‘ஹாலிக்கை’ அல்ல.ஷைத்தானையும் படைத்து ஜின்னையும் படைத்த அல்லாஹ்வையும் அல்ல.ஆட்சியையும் அதிகாரத்தையும் ஹக்கீம் கையில் கொடுத்த அந்த ‘ஹாக்கிமும்’ அல்ல.

குர்ஆனையும் சுன்னாவையும் யாப்பாகக் கொண்ட கட்சித் தலைவர் உதவி தேடியது யாரிடம் தெரியுமா?

இலங்கை முஸ்லீம்களின் தலைவர்,குர்ஆனையும் சுன்னாவயும் அடிப்படையாகக் கொண்ட கட்சியின் தலைவர் குமாரியின் பேயை விரட்ட அடைக்கலம் தேடியது பௌத்தர்கள் வணங்கும் ‘தெடிமுண்ட’ தெய்வத்தை.

மாவனெல்லையில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீற்றர் உள்ளே சென்றால் ஹிங்குல்ல என்றொரு கிராமம் வரும்.அதனுள் இன்னும் இரண்டு கிலோமீற்றர் சென்றால் அளுத்நுவர என்றொரு ஊர் இருக்கிறது.அங்குதான் தெடிமுண்ட தேவாலயம் இருக்கிறது.அது பௌத்தர்களின் பிரபலமான தேவாலயம்.

கெட்ட ஆவிகள்,கெட்ட சக்திகளை விரட்ட வல்ல தெய்வம்தான் தெடிமுண்ட தெய்வம் என்று பௌத்தர்கள் நம்புகிறார்கள்.அந்த கோயிலில் இருக்கும் ஒரு பெண்தான் கிரி அக்கா என்பவர்.தெடிமுண்ட தெய்வம் அப்பெண்ணில் உருவேறியிருக்கிறது என்று சிங்களவர்கள் நம்புகிறார்கள்.
அந்த றப்புல் ஆலமீனை சுஜூது செய்யும்,இணையில்லா ஓரிறையை வணங்கும் முஸ்லீம் சமூகத்தின் தலைவர் குமாரியின் பேயை விரட்டுவதற்கு தெடிமுண்ட தெய்வத்திற்கு சக்தி இருக்கிறது என்று நம்பினார். ஹக்கீமுக்கு நெருக்கமான ஒருவர்தான் இந்த விடயங்களை ஏற்பாடு செய்திருந்தார்.அவர் மரணித்துவிட்டதால் அவரைப் பற்றிய விபரங்களை நான் எழுத விரும்பவில்லை.

குமாரியின் பேயை விரட்ட தெடிமுண்ட தெய்வம் குடியேறியிருக்கும் கிரி அக்காவை தன் வீட்டின் படுக்கை அறைக்கு அழைத்து வந்து பூஜை(தொவில) செய்தது எலுமிச்சை வெட்டி பேயை விரட்டினார் ஹக்கீம்.அதனால் குமாரியின் ஆவி சென்றுவிட்டது என்று நம்பினார். அடுத்த பதிவில் கிரி அக்காவின் வாக்குமூலம் வீடியோ வடிவில் வெளியிடப்படும்.

இது ஒரு அப்பழுக்கற்ற இணை வைப்பு.இதில் மாற்றுக்கருத்தில்லை. பௌத்தர்கள் வணங்கும் ஒரு கடவுள் தனக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சக்தி உள்ளது என ஹக்கீம் நம்பியிருக்கிறார்.அந்தக் கடவுளின் உதவியை நாடி இருக்கிறார்.ஒரு பெண்ணில் கடவுள் இறங்கியிருக்கிறது என்று நம்பியிருக்கிறார். அந்தக் கடவுளால் குமாரியின் ஆவியை ஓட்ட முடியும் என அவர் விசுவாசித்திருக்கிறார்.

அந்நியப் பெண்ணோடு விபச்சாரம்.அது பாராளுமன்றம் வரைக்கும் வந்து,காங்கிறசின் ஒவ்வொரு அரசியல் முடிவிலும் ஆதிக்கம் செலுத்தியது போதாமல் அந்தப் பெண்ணின் மரணமும் ஹக்கீமின் நிதானத்தை இழக்கச் செய்து இணைவைப்பு வைப்பு வரைக்கும் இட்டுச்சென்றிருக்கிறது.

ஹக்கீம் ஒரு தனிமனிதனாக இருந்திருந்தால் அவரின் தவறுகள் அவரோடு மட்டும் முடிந்திருக்கும்.ஆனால் இப்படிப்பட்ட ஒருவரிடம் எமது சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை அடகு வைத்துவிட்டு நாம் காத்திருப்பதா? இப்படிப்பட்ட ஒருவரிடம் குர்ஆனையும்,சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்ட கட்சியின் தலைமைத்துவத்தைக் கொடுப்பதா? தெடிமுண்ட தெய்வத்தை வணங்குபவர்களை தலைவராக்குவதற்கு இந்தக் கட்சி ஹெல உருமய அல்லவே.இது முஸ்லீம்களின் காங்கிறஸ்.

அஷ்ரப் அவர்கள் கலீமாச் சொல்லி வளர்த்த கட்சி இது.எப்படி காபிர்களைக் கூட்டி மந்திரிப்பவரின் கைகளில் அது போனது?இது அல்லாஹ்வின் ஆசீர்வாதம் வேண்டி நிற்கும் கட்சி.எப்படி தெடிமுண்ட தெய்வத்திடம் உதவி கேட்டுப் போனது.இது அப்துஸ் ஸமதினதும் அப்துல்லாஹ்வினதும் கட்சி எப்படி குமாரி கூரேயினதும் கிரி அக்காவினதும் கட்சியாகப் போனது?

கல்லெறிந்து கொல்லப்பட வேண்டிய ஒழுக்கமற்ற அரசியல்வாதி. ஆனால் ஹிஜாபை நிலை நாட்டும் மனைவியரின்,மகள்களின்,சகோதரியரின் அரசியல் தலைவர். தலைவெட்டிக்கொல்ல வேண்டிய இணை வைக்கும் அரசியல் வாதி.சுஜூது செய்யும் முஸ்லீம்களின் தலைவர்.நாக்கில் நாரே தக்பீர்.நடத்தையில் தெடிமுண்ட தெய்வம்.

என்னே முரண்பாடு.இப்படிப்பட்டவர்கள் தலைவர்களாக இருக்கும் வரைக்கும் எப்படி எங்கள் இறைவன் எங்கள் அரசியலை ஆசீர்வாதம் செய்வான்.காபிர்களின் சோதனைகளில் இருந்து எங்கள் இறைவன் எப்படி எங்களை விடுவிப்பான்.

மீண்டும் உரத்துச் சொல்கிறேன்.ஹக்கீம் இருக்கும் வரைக்கும் முஸ்லீம் காங்கிறஸால் முஸ்லீம்களுக்கு கரையோர மாவட்டமில்லை ஒரு கடலைப் பருப்பைக் கூட பெற்றுத்தர முடியாது.

ஹக்கீமை இழந்து காங்கிறசைக் காப்பாற்றுவதா?காங்கிறசை இழந்து ஹக்கீமைக் காப்பாற்றுவதா? போராளிகள் சிந்திக்கட்டும்.

இது ஒரு நீண்ட பயணம்.(தொடரும்)

RAAZI MUHAMMADH JAABIR