சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பம்

அஸ்லம் எஸ்.மௌலானா
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த, அல்குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் இதற்காக விண்ணப்பிக்க முடியும் எனவும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வகுப்புகள் ஆரம்பமாகும் என்றும் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.
மேலதிக விபரங்களுக்கு 0777839527 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
இங்கு ஐந்து வருட மௌலவியா கற்கை நெறியுடன் க.பொ.த.உயர் தர கலைப்பிரிவு வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் இங்கிருந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவிகள் அனைவரும் சித்தியடைவதுடன் அவர்களுள் பெரும்பாலானோர் பல்கலைக்கழக அனுமதியையும் பெற்றுக்கொள்கின்றனர்.
இக்கல்லூரியில் முதற்தொகுதி மாணவிகள் ஆறு பேர் அண்மையில் மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்