ஹஸனலியின் கருத்துக்களை பொய்யாக்கி அதனூடாக குளிர் காய்ந்த ஹக்கீம்

கரையோர மாவட்டத்தை மையப்படுத்திய   ஹஸனலி, ஹக்கீமின் ஆடு புலி ஆட்டம். 

தமிழ் மக்களின் பிரச்சனைகள் வெளிநாடுகளின் உதவியோடு,  இலங்கை அரசின் யோசனையுடன், தமிழ் கூட்டமைப்பின் நெருக்குதலில்   ஓரிரு வருடங்களில் தீர்க்கப்படக் கூடிய சாதகமான நிலை  அண்மித்து விட்டதால்      இது தொடர்பான உடன்படிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டு அமுல்படுத்தப்படும் போது கொடுக்கக்கூடிய ஆதரவுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய பெருந்தொகை  சன்மானத்தை உத்தரவாதப்படுத்திக்கொள்ள “வடக்கு கிழக்கு இணைவதற்கு நாங்கள் எதிர்ப்பல்ல” என்ற பாணியில்  ஹக்கீம் தனது முஸ்தீபுகளை முற்படுத்த தொடங்கினார். 

இதற்கிடையில் இஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபினால்  ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்த கிழக்கு மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய,  கிழக்கு முஸ்லீம்களுக்குரிய தீர்வான கரையோர மாவட்டம் என்ற கட்சியின் கொள்கை இந்த முஸ்தீபுகளுக்கு, இலாபங்களுக்கு தடையாக காணப்படின் எவ்வாறு காய்களை நகர்த்த வேண்டும் என்ற விடயங்களில் ஹக்கீம் தனது முழுக் கவனத்தையும் செலுத்த  நேரிட்டது.   

ஆனால் ஆரம்பத்திலிருந்தே கரையோர மாவட்டத்தினை பெறுவது தொடர்பாக பல்வேறு  முயற்சிகளை  செய்து கொண்டிருந்த ஹஸனலிக்கு  நல்லாட்சி அரசில் இராஜாங்க  அமைச்சராக இருந்த  காலத்தில்   ஹக்கீம் உள்ளார்ந்த ரீதியாக இவ்வாறான வேளைகளில் ஈடுபடுவதை தெரிந்து கொண்ட போது, வேதனையடைந்ததுடன்    நல்லாட்சி அரசின் முக்கிய பிரமுகர்களுடன்   கரையோர மாவட்டத்தைப் பற்றி ஆராய்ந்த சந்தர்ப்பத்தில் கரையோர மாவட்டத்தினைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக  இன்று வரைக்கும் எவருடனும் ஒரு வார்த்தை கூட ஹக்கீமால் பேசப்படவில்லை என்பதும், பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து தமிழ் மக்களினது பிரச்சனைகள் தீர்க்கப்படும் போது இதுவும் சேர்த்து தீர்க்கப்படுமென கருத்துக் கூறப்பட்டது .

இந்த இடத்தில் இருந்து தான் ஹஸனலி கரையோர மாவட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கான நல்லிணக்க வழிகளை நல்லாட்சி அரசில் தேடினார். இதனை தெரிந்து கொண்ட  இலாப நோக்கம் கொண்ட  ஹக்கீம்  சேவை நோக்கம் கொண்ட ஹஸனலியை  தொடர்ந்து  செயலாளர் நாயகமாக வைத்து  இருந்தால் ஏற்கனவே பல வேலைகளுக்கும், வருமானங்களுக்கும் முட்டுக் கட்டையாக இருந்தது போல் இதற்கும் இருப்பார் என நினைத்து ஹக்கீமால்  இந்த இடத்தில் இருந்து தான் ஹஸனலியை வெளியேற்றும்  வேலைகள் ஆரம்பமானது. ஹஸனலி தேர்தலில் போட்டியிடுவதை பல பொய்களை சொல்லி தடுத்ததோடு,  முதல் வருடம்  செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன,  அடுத்த வருடம் செயலாளர் நாயகம் எனும்  பதவியே இல்லாமல் செய்யப்பட்டது.

ஹக்கீமின் இலாப நோக்கை நிறைவேற்றிக் கொள்வதற்காக தனக்கு இவ்வாறான துரோகங்களும், கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய அநியாயங்களும் நடைபெற இருப்பதனை தெரிந்து கொண்ட ஹஸனலி தேசியப்பட்டியல் ஹக்கீம் தரப்பினரால் தரப்படுவதால் அதனுடன்  பழையபடி செயலாளர் நாயகத்தினையும் சேர்த்து   தரவேண்டிய ஒரு சூழ்நிலையினை தேர்தல் ஆணையாளர் முன்பாக ஏற்படுத்தினார் .

 ஆனால் ஹஸனலி  உண்மையில் தேசியப்பட்டியலை பெற்ற பின்னர் படிப்படியாக கரையோர மாவட்டத்தினை பெறுவதற்கான குரலினை நல்லாட்சி அரசில் ஏற்படுத்துவதுடன் கரையோர மாவட்ட பிரேரணையை உக்கிரமடையச் செய்து அதனைக் காரணமாக வைத்து சில மாதங்கள் சென்றதன் பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அதன் மூலம் கரையோர மாவட்டம் உறுதிப்படுத்தப்பட இது தான் இதற்குரிய சரியான வழியும், சந்தர்ப்பமும் என  ஹஸனலி எண்ணியதோடு,  அதையும் தாண்டி  கரையோர மாவட்டத்தினை பெறுவதில் ஹக்கீமால் ஏதாவது தடங்கல்கள் ஏற்படின் தனது செயலாளர் நாயகம் எனும் பதவியை பாவித்து ஹக்கீமை தலைமைப் பதவியில் இருந்து தடை செய்யவும் ஹஸனலி திட்டமிட்டிருந்தார். 

இதனை தெரிந்து கொண்ட ஹக்கீம் தனது இலாப நோக்கத்துக்கு ஹஸனலியால் மீண்டும் தடையா? கொடுக்கும் தேசியப்பட்டியலையே ஹஸனலி கரையோர மாவட்டத்தினை கேட்டுப் போராடி ராஜினாமா செய்தால் சகல விடயங்களும் கையை கடித்துவிடும் என்பதாலும், இனப்பிரச்சனை தீர்வு முடிய முன் ஹஸனலியால் தனது தலைமைப் பதவிக்கு எதாவது ஏற்பட்டால் முதலுக்கே  நஷ்டம் வந்துவிடுமென  ஹக்கீமால் ஹஸனலிக்கு கொடுக்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் மீறப்பட்டு, ஹஸனலியை புதிய பதவியில் அமர்த்துவது போல்  நாடகமாடி பாரிய வலையில் தள்ளி, மக்கள் முன் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி, ஹஸனலியின் கருத்துக்களை பொய்யாக்கி அதன் மூலம் ஹக்கீம் குளிர் காய்ந்து தனது இலாப நோக்கினை அடைய பாரிய முயற்சியொன்று கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் ஹக்கீம் அணியால் முன்வைக்கப்பட்டது, இந்த சதி வலையில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ளவே ஹஸனலி இக்கூட்டத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்ப்பிடத் தக்கது.

இன்றும் கூட கரையோர மாவட்டத்தை இலக்கு வைத்தே ஹஸனலியின் சகல நகர்வுகளும்  காணப்படுவதுடன் ஊருக்கு ஊர் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன  என்பதனை மக்களாகிய நாங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.  

 அமீர் மௌலானா