அஷ்ரப் என்கின்ற ஆளுமை தொடர்பில் இன்றிருக்கின்ற சிலர் அஷ்ரப் தானே அவர் எதை கிழித்தார் என்றும் பல பக்க வடிவங்கள் எழுகின்றனர்.
நண்பர்களே!!
கட்சி என்பது கூட்டுப் பொறுப்புடன் செயலாற்ற வேண்டிய விடயம் மறைந்த தலைவர் உருவாக்கிய கட்சி இன வன்முறையால் மக்கள் சிக்கி தவித்த போது அவர்களை நெறிப்படுத்தி முஸ்லிம்களின் உரிமை தொடர்பாகவும் அவர்களது சமுக பொருளாதார விடயங்கள் தொடர்பில் பேசுவதற்க்காக உருவாக்கப்பட்டது. மறைந்த தலைவர் மாத்திரம் தலைவராக இல்லாமல் சில சுயநல அரசியல் போக்குடையவர்கள் இருந்திருந்தால் மிகப் பெரிய அழிவுகளையும் தமிழர் சமுகம் சந்தித்தது போன்று கொடுமைகளையும் நான் சந்திக்க வேண்டி வந்திருக்கும்.
அவ்வாறான தலைவரை வடக்கு கிழக்கு முஸ்லிம் சமுகம் நம்பியது. அவருடைய கட்சிதான் எமக்கு உரியதென விசுவாசித்தது ஆனால் நடந்து என்ன?
வடக்கு கிழக்கில் அஷ்ரப்பை வைத்து எதுவும் செய்ய முடியாது என்பதை மிக கன கச்சிதமாக சர்வதேசம் நம்பியது.இதனால் 2000ம் மாண்டு அவர் படு கொலை செய்யப்பட்டார். பின்னர் ரவூப் ஹக்கீம் தலைவரனார். மிக இலகுவாக சோரம் போனார். ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரம்தான் தான் கண்டியில் இருந்து பாராளுமன்றம் செல்ல முடியுமென நம்பிய ஹக்கீம் நோர்வே ஒப்பந்தத்தில் முஸ்லீம்களை குழு என்றும் அரச தரப்பில் ஒரு அங்கமாகவும் இடம் பெறச் செய்தார்.இது இச் சமுகத்திற்க்கு ஹக்கீம் செய்த சிறிய தூரோகமா?
அதன் பின் அதாஉல்லாஹ் உள்ளிட்டோர் சுமார் 37 குற்றச்சாட்டு களை சுமத்தி கட்சியை விட்டு வெளியேறனர் மகிந்த ஆட்சியில் கிழக்கு பிரிக்கப்பட்டது , புலிகள் அழிக்கப்பட்டனர் , நாடு சமாதான மடைந்தது.
புலிகளை அழித்த கோபத்தில் தமிழ் தேசியம் இருந்தது. முதலாவது தடவை மகிந்த வினுடைய அதிகாரத்தை பறித்தெடுக்க சரத் பொன்சேகா பயன்படுத்தப்பட்டார் , இறுதி வரை மகிந்தவோடு இருந்த ஹக்கீம் பொன்சேகா பக்கம் போனார் தோல்வியடைந்தனர். பின்னர் முஸ்லிம்கள் மீது வன்முறையை தூண்ட பொது பல சேனா அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. நாளுக்கு நாள் முஸ்லிம்களின் மீதான மகிந்த எதிர்ப்பு அதிகமாகி கொண்டே இருந்தது. அரசுக்குள் இருந்த சம்பிகரணவக ஏற்கனவே அவர்களால் விலைக்கு வாங்கப்பட்டார்.
அவர் உள்ளே இருந்து ஞானசார தேரருக்கு உதவி வழங்கினார்.ஒரு கட்டத்தில் மகிந்த கத்தியால் குத்தப்பட்ட ஒரு நபரின் நிலைக்கானார்.எடுத்தாலும் மரணம் வைத்திருந்தாலும் மரணம் என்கின்ற மிக அபயகரமான நிலைஞானசாரவை கைது செய்தால் சிங்கள மக்களின் வாக்குகளும் வைத்திருந்தால் முஸ்லிம்களின் வாக்குகளையும் இழக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டார். நல்லாட்சி மலர்ந்தது முஸ்லிம்களின் இழப்புகளுக்கு என்ன நடந்திருக்கிறது. சம்பிக ரணவக்க ஆட்சியோடு இருக்கிறார் . பொன்சேகா ஏற்கனவே அவர்களில் அஜன்டாவில் இருப்பவர் தேசிய பட்டியல் கொடுத்து அமைச்சராக்கி இருக்கிறார்கள்
முஸ்லீம்களுக்கு என்ன நீதி கிடைத்திருகிறது? தம்புள்ளை பள்ளியிலிந்து பேருவளை வரை ஆயிரம் நாள் கடந்தும் என்ன நடந்திருக்கிறது. ஆனால் இன்று முஸ்லிம்களை இணக்கி வடக்கு கிழக்கை இணைத்து தீர்வை பெற நோர்வே டயஸ்போரா போன்றவை களமிறக்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் வடக்கு கிழக்கின் இலங்கையின் அமைவிடம் குறித்த சர்வதேச பார்வையினால் ஏற்படுகின்ற மாற்றங்களாகும்.
அவ்வாறு நோர்வை யின் இஷ்டத்துக்கு இயங்குவதற்க்கு கட்சிக்குள் சிலர் தடையாக இருப்பதாக கருதி வெட்டப்பட்ட இறுதியாக இருந்த மரங்கள் வீதியில் இன்று அலைகின்றன. இவை தவறு என வாதிடும் நன்பர்கள் இளைஞர்கள் கீழே காணப்படும் முஸ்லீம மக்கள தொடர்பான அரசியலமைப்பு மாற்றம் தேர்தல் சீர்திருத்தம் என்பனவற்றில் தமிழர் பிரதிநிதிகளான சுமந்திரன் ஐயா மனோ கணேசன் அவர்களும் நோர்வே பிரஜை ஒருவரும் ஏன் கலந்து கொண்டார்கள் ?
ஈஸ்ட் லகூனில் இடம்பெற்ற அரசியலமைப்பு மாற்ற விடயத்துக்கு சர்வதேச அரச சார்பற்ற நிருவனம் ஏன் செலவுகளை பொறுப்பேற்க வேண்டும்? சொல்ல வேண்டி நினைத்தவை.
AZMY ABDUL GAFOOR