கிழக்கிற்கு அதா உல்லாவும், வடக்கிற்கு றிஷாத்தும் இவர்களுக்கு செயலாளராக ஹசன் அலியும் ?

 
கிழக்கு வடக்கு முஸ்லிம் தலைமைகளை உள்ளடக்கியதான ஒரு தலைமைத்துவ சபையை உருவாக்கி, கிழக்கு வடக்கு முஸ்லிம்களின் சிந்தனைத் தலைமைத்துவத்தையும் அரசியல் தலைமைத்துவத்தையும் உள்ளடக்கியதான ஒரு பலம் பொருந்திய அமைப்பாக உருவாக்கும் முயற்சி வெற்றியளிக்கும் சாத்தியக்கூறுகள் தெரிய ஆரம்பமாகியுள்ளது. மாஷா அல்லாஹ்.
 
தலைமைத்துவ சபைக்கு பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுபடாத ஒரு அமீரை நியமிப்பதுடன் கிழக்கின் அரசியல் தலைவராக ஒருவரையும் வடக்கின் அரசியல் தலைவராக ஒருவரையும் நியமிக்கும் திட்டம் ஆலோசிக்கப்படுகின்றது.
 
கிழக்கு வடக்கின் ஆளுமைகளை தலைமைத்துவ சபைக்கு உள்வாங்குவதுடன், அதாவுல்லாஹ் அவர்களை கிழக்கின் அரசியல் தலைவராகவும், ரிஷாட் அவர்களை வடக்கின் தலைவராகவும் நியமித்து, இதன் செயலாளராக ஹஸனலி அவர்களையும் நியமிக்க ஆலோசிக்கப்படுகின்றது. 
 
இதன் மூலம் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள தகுதியான இளைஞர்களை அடையாளம் கண்டு தலைமைத்துவ வழிகாட்டல் வழங்கி எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக மிளிர செய்யும் வாய்ப்புக்கள் உள்ளன.
 
தகுதியானவர்களை கொண்ட தலைமைத்துவ சபை ஒன்றை நிறுவி சமகால அரசியலை  இஸ்லாமிய நெறிமுறையில் கையாளக்கூடிய ஆழ்ந்த அறிவும் இறையச்சமும் கொண்ட அமீர் ஒருவரின் வழிகாட்டலில் இயங்க முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அனைத்து முஸ்லிம் கட்சிகளும் முன்வரவேண்டும்!
 
தலைமைத்துவ சபை நிறுவலுக்கான தமது பூரண ஆதரவை வழங்க சகோதரர்கள் அதாவுல்லாஹ் அவர்களும் ஹஸன்  அலி அவர்களும் முன்வந்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் நாளை பஷீர் சேகு தாவூத் அவர்களுடன் இது பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் கல்முனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இன்ஷா அல்லாஹ், ரிஷாட் அவர்கள் மற்றும் ஹிஸ்புல்லாஹ் அவர்களுடனும் ஏனைய தலைவர்களுடனும் விரைவில் இது குறித்து கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
 
தலைமைத்துவ சபை
கிழக்கின் எழுச்சி