அரசியல்வாதிகள் பணத்துக்காக எதையும் செய்யும் அளவுக்கு மாறிப்போயுள்ளார்கள். மனிதாபிமானத்தை பொய்யாக்கிவிட்டு அரசியல் நடத்துவதால் எவ்வித நன்மையும் நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ ஹெரகொல்ல ஒச்சடிவத்தை முஸ்லிம் வித்தியாலத்தின் 25 வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.