சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரின் இலங்கைக்கான விஜயம் ரத்து !

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டின் லெகார்ட் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை அவர் இரத்து செய்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இலங்கைக்கு எதிர்காலத்தில் விஜயம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப் பேச்சாளர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின்  பொருளாதாரம் மற்றும் நிதி சந்தையின் ஸ்தீரதன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்தல், அடுத்த கடன் தொகைக்கான சூழலை பரிசீலித்தல் மற்றும் இலங்கையில் பொருளாதார சிக்கனமுறைகளை ஏற்படுத்துவதற்கான வலியுறுத்தல்களை மேற்பார்வை செய்தல் என்பன இவரது விஜயத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் கடந்தாண்டு 6 தவணைகளில் திருப்பி தரும் நிபந்தனையின் கீழ் வழங்கப்பட்ட கடன் தொகையான 1.5 பில்லியன் அமெரிக்க டொலரானது,  இலங்கையின் உடனடி அந்நிய செலாவணி நெருக்கடி அபாயத்தை தீர்த்த நிலையில், நாட்டின் சர்வதேச நிதியியல் எதிர்மறை தரமிடலில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என பொருளாதார நிபுணர் குழுவால் விமர்சனமொன்று முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.