கடும் வறட்சி காரணமாக சோமாலியாவில் 110 பேர் பட்டினியால் மரணம்..

கடும் வறட்சியால் சோமாலியாவில் 110 பேர் பட்டினியால் மரணம் அடைந்துள்ளனர். சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகின்றதனால் குடிநீர் மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கு சுமார்  30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சோமாலியாவின் தென் மேற்கு வளைகுடா பகுதியில் மட்டும் 48 மணிநேரத்துள் 110 பேர் பட்டினியால் இறந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.  அங்குள்ள அவ்டின்லே என்ற நகரில் ஏராளமானவர்கள் கொத்து கொத்தாக  உயிரிழந்துள்ளதாகவும்  அங்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை என்பதனால்  கொலரா நோய் வேகமாக பரவி வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த  உயிரிழப்பு குறித்த தகவலானது   ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து மட்டும் வெளியாகி உள்ளது எனவும் இதுபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் உணவின்றி உயிரிழக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.