அனுமதி வழங்காவிட்டால் சுயாதீன போலீஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படும்: எம்.ரி .ஹஸனலி

நிந்தவூரில் (03.03.2017 ) இன்று மாலை 06.30 மணிக்கு’ நடந்தது என்ன?’,  ‘நடக்கப்போவது என்ன?’ என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் முன்னாள் செயலாளர் நாயகம் அல்ஹாஜ் எம்.ரி .ஹஸனலி  மனம் திறந்து விளக்கம் தருகின்றார்.  இதற்கான  பொதுக்கூட்டம் நிந்தவூர் பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தை நடாத்திவதற்கான போலீஸ் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என்று ஏற்பாட்டாளர்கள் விசனம் தெருவிக்கின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும், சட்டப்படியான விதியில் இக்கூட்டம் நடந்தே தீருமென்று நம்பகமாக தெரிய வருகின்றது.

இது தொடர்பாக ஹசன் அலி அவர்கள் தகவல் தருகையில் ,

“போலீசார் கூட்டம் நடக்க  அனுமதி வழங்காவிட்டால் சுயாதீன போலீஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

இன்று நடைபெறுகின்ற அம்பாறை மாவட்டம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் கூட்ட மண்டபத்தை சென்றடைவர்..