19வது உதா கம்மான மாதிரி வீடமைப்புக் கிராமத்தில் 25 வீடுகளை அமைச்சர் சஜித் திறந்து வைத்தார்

அஷ்ரப். ஏ. சமத்
மாத்தளை லக்கலயில் 19வது உதா கம்மான மாதிரி வீடமைப்புக் கிராமத்தில்  25 வீடுகள் அமைச்சர்  சஜித் பிரேமதாசாவினால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் மாத்தளை மாவட்டத்தின் 316 இளைஞர்  யுவதிகளுக்கு  நிர்மாணத்தொழில் ஈடுபடுவதற்காக 24 இலட்சம் பெருமதியான உபகரணங்களும் அமைச்சாினால் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் 285 வயோதிபர்களுக்கு  இலவச மூக்குக் கண்னாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது. 
இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வசந்த  அலுவிகார மற்றும் மக்கள் பிரநிதிகளும் கலந்து கொண்டனர். 
கொழும்பு கண்டி போன்ற நகரங்கள் தவிர்ந்த ஏனைய கிராமிய பிரதேசங்களில் 330 உதா கம்மான மாதிரி வீடமைப்புக்கிராமங்கள் நிர்மாணிகக்ப்பட்டு வருகின்றன. இதற்காக தேசிய வீடமைப்புக்கடன் 3 இலட்சம் ருபா வீடமைப்புக் கடனும் அரச காணிகள் 10-20 பர்ச் இலவசமாக வழங்கப்பட்டு மற்றும் உள்ளக பாதைகள், நீர் மிண்சாரம் வழங்கப்பட்டு இக் கிராமங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதாக அமைச்சர்  சஜித் பிரேமதாச கூறினார்.