உலமாக் கட்சித் தலைவர் முபாறக் மௌலவியின் சீதனம் ஹலால் என்ற பத்வாவிற்கான எதிர் வாதம் !

unnamed_Fotor

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 

யாவரும் பிழை என்பதை நாம் சரி என்று விவாதத் திறமையினால் வெற்றி கொள்ளும் போதும்,யாவரும் சரி என்பதனை நாம் பிழை எனக் கூறி எமது விவாதத் திறமையினால் வெற்றி கொள்ளும் போதும் குறித்த நபர் அதீத பிரபலமாகுவார்.உலமாக் கட்சித் தலைவர் முபாரக் மௌலவியும் இவ்வாறானாதொரு முயற்சியில் இவ் சீதன வாதத்தினை முன் வைக்கிறார் என்றே என் மனம் சொல்ல நினைக்கின்றது.எனினும்,அவர் உள்ளத்தினை இறைவனே நன்கு அறிவான்.மௌலவி சீதனம் ஹராம் அல்ல என பத்வா வழங்கி இருப்பதில் அவர் சீதனம் எனக் குறிப்பிடுவது பெண் வீட்டார் தனது பிள்ளைக்கு வழங்கும் சொத்தினையே ஆகும்.மௌலவியும் ஆண் வீட்டார் பெண் வீட்டாரிடம் சொத்தினைக் கேட்பதனை பிழை எனவே குறிப்பிடுகிறார்.மௌலவி அவர்கள் நன்றாக ஒரு விடயத்தினை விளங்கிக் கொள்ள வேண்டும்.சீதனம் எனும் வார்த்தை தான் திருமணம் செய்ய பெண் வீட்டாரிடம் ஆண் வீட்டார்  பலவந்தமாக கேட்டு எடுக்கும் சொத்தினையே குறிக்கப் பயன்படும்.பெண் வீட்டார் பெண்ணிற்கு வழங்குவது சீதனம் அல்ல மாறாக ஆதனமாகும்.இதுவே மௌலவிற்கு போதுமான பதிலாக இருப்பினும் அவரது சில விடயங்களினையும் ஆராய்வோம்.

சீதனம் நாம் வாங்கக் கூடாது எனத் தவிர்க்க “சீதனம் வாங்கக் கூடாது என குர்ஆனிலோ,ஹதீதிலோ கூறப் படுகிறதா..??” என்பதே முபாரக் மௌலவி முன் வைக்கும் இவ் வாதத்தின் அடிப்படை எனலாம்.குர்ஆனில் குறிப்பிடப்படாத ஒன்றினை இஸ்லாத்தில் இருப்பதாகக் கூறுவது பித்அத் இதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.இதற்கு மறுதலையாக சிந்தித்தால் மௌலவி இடம் நாம் ஒரு வினாவினையும் முன் வைக்கலாம் “சீதனம் வாங்கித் தான் திருமணம் செய்ய வேண்டும் என இஸ்லாம் கூறுகிறதா?” எனவும் வினா எழுப்பலாம்.ஏனெனில்,திருமணம் இவ்வாறே செய்ய வேண்டும் என ஹதீத்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன.அவைகள் இது பற்றியும் குரிப்பிட்டிரிக்கத் தானே வேண்டும் எனவும் கேட்கலாம்.ஆனால்,இதனையே விவாதத்தன் கருவாக கொள்ள விரும்பவில்லை.

சீதனம் பற்றி நேரடியாக குர்ஆன் குறிப்பிட்டிருப்பின் நாம் இது பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை நேரடியாக ஏற்றே ஆக வேண்டும்.மௌலவி இதற்கு ஒரு குர்ஆன் ஆதாரத்தினையும் முன் வைத்தார் 

“நபியே! நீங்கள் பெண்களைத் தலாக் சொல்லுவீர்களானால் அவர்களின் இத்தாவைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள்.உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வினை அஞ்சிக் கொள்ளுங்கள்;தவிர (அப் பெண்கள்) பகிரங்கமாக மானக் கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களினை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள்;அவர்களும் வெளியேறலாது-65:01”

இவ் வசனத்தில் மௌலவியின் வாதம் “தலாக்கின் மூலம் இருவரும் பிரிந்த பின்பு எவ்வாறு கணவன் வீட்டில் இருப்பது..?? என்பதும் அவர்களின் வீடு என இவ் வசனம் குறிப்பிடுவது அப் பெண்களின் வீடுகளினை என்பதையே என்பதாகும்”

இவ் வசனத்தினை நாம் நன்கு சிந்திபோமேயானால் அப் பெண் தனக்கென தந்தையோ.தானோ கட்டிய வீட்டில் திருமணம் முடித்திருந்தால் மனைவியினை விவாகரத்துச் செய்தால் கணவனே அவ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும்.இவ் வசனம் யாரினை வெளியேறுமாறு கூறுகிறது..?? அப் பெண் தன வீட்டில் இருந்து மானக் கேடான காரியத்தினைச் செய்தால் அப் பெண்ணிற்கு இஸ்லாமிய முறைப்படி என்ன தண்டனை வழங்க வேண்டுமோ அதைத் தான் வழங்க வேண்டுமே தவிர அப் பெண்ணினை அப் பெண்ணின் வெளியேற்ற யாருக்கும் அனுமதி இல்லை.எனவே,அப் பெண் தனக்கு சொந்தமில்லாத வீட்டில் இருக்கும் போதே ஒருவரால் காட்டளை இட முடியும் அவர்களினை வெளியேற்ற வேண்டாம் எனக் கூற முடியும்.இதனை சாதாரணமாக விளங்கிக் கொள்ளலாம்.இவ் வசனம் கூட அப் பெண் தலாக் நேரம் தனக்கு உரிமையான வீட்டில் இல்லை என்பதையே காட்டுகிறது.

தலாக்கின் மூலம் இருவரும் பிரிந்த பின்பு எவ்வாறு கணவன் வீட்டில் இருப்பது..?? இது பற்றி மௌலவி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.நானோ நீங்களோ  இருவர் பிரிந்த பின் ஒன்றைச் செய்யுங்கள் என்றால் செய்யாது இருக்கலாம்.படைத்த இறைவன் ஒன்றினைச்  சொன்னால் அதில் நாம் எமது மூளையினை போட்டு உடைக்க வேண்டிய அவசியம் இல்லை.செய்து தான் ஆக வேண்டும்.மேலே குறிப்பிட்ட குர்ஆன்  வசனத்தினை இறைவன் முடிக்கும் போது “இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறிய மாட்டீர்” என்றே முடிக்கின்றான்.அல்லாஹ்விற்கும் தெரியும் இவ் மௌலவி போன்று பலரும் வினா எழுப்பலாம் என்று அதற்கு தான் அல்லாஹ்வின் பதில் “ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறிய மாட்டீர்” இதனை விளங்கும் அளவு ஆற்றல் மனிதனுக்கு இல்லை.அல்லாஹ்வே நாம் அறிய ஆற்றல் இல்லை எனும் போது இல்லை இல்லை நான் அறிய வேண்டும் என்பது இஸ்லாத்தினை அவமதிப்பதாய் தான் இருக்கும்.

சரி நாம் சீதனம் வாங்குங்கள் என்றோ வாங்க வேண்டாம் என்றோ இஸ்லாம் நேரடியாக கூற வில்லை என்று வைத்து வாதத்திற்கு வருவோம்.ஒரு விடயத்தினை இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்றால் அதனை அவ்வாறு தான் செய்ய வேண்டும்.இதில் மௌலவிற்கும் மாற்றுக் கருத்து இருக்காது என நம்புகிறேன்.திருமணம் என்பது இவ்வாறு தான் அமைய வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது.இதில் எங்கும் நாம் மாற்றத்தினை ஏற்படுத்த முடியாது.இதில் எங்கும் பெண்ணிடம் கேட்டு வாங்குங்கள் என இஸ்லாம் குறிப்பிடவில்லை.மாறாக மகரினை வழங்கவே இஸ்லாம் கட்டளை இடுகிறது.மகாராக 1001 நாம் கொடுத்து விட்டு பல இலட்சம் ரூபாய் கேட்டு ஒருவர் வாங்குகிறார்.இவர் மகர் கொடுத்தாதாக பொருள் ஆகுமா..?? இங்கே நாம் சீதனம் வாங்கும் போது இறைவனின் மகர் என்ற கட்டளையினை புறக்கணிப்பது போன்று ஆக வில்லையா..?? இதனை இலகுவாக விளங்க ஒரு உதாரணம் “நாம் சமைக்கும் ஓது போதுமான அளவு உப்பு இட்டு கறி ஆக்கிவிட்டு எதோ ஒரு வழியில் அவ் உப்பினை வெளியேற்றினால்” அக் கறிக்கு யாது நிகழும்? உப்பில்லாப் பண்டம் குப்பையில் அல்லவா..??

மகரானது திருமண அன்பளிப்பு அதே போன்று சீதனம் என்பதும் திருமண அன்பளிப்பு இரண்டும் ஒன்று என்றபடி தனது நிருவலினை அமைத்தார்.இதில் உண்மை  என்னெவென்றால் மௌலவிற்கு மகரின் உண்மைப் பொருளும் தெரியாது.அன்பளிப்பின் அர்த்தமும் தெரியாது.நடைமுறையில் சீதனம் என்றால் என்ன என்றும் தெரியாது என நினைக்கின்றேன்.மகர் என்பது இறைவனின் கட்டளைக்கு அமைய வழங்கப்படும் ஒன்று யார் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி வழங்கியே ஆக வேண்டும்,இவ்வாறான ஒன்றினை அன்பளிப்பாக முதலில் குறிப்பிட முடியாது.அன்பளிப்பு என்பது எதுவித நிப்பந்தமும் இன்றி விரும்பிக் கொடுக்கும் ஒன்றாகும்.சீதனம் எனக் குறிப்பிடுவது மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் கேட்பதே.பெண் வீட்டாரே கொடுப்பது சீதனம் அல்ல.ஒருவர் கேட்டு கொடுக்கும் ஒன்று எவ்வாறு அன்பளிப்பாகும்? மேலும்,மகர் என்பது பெண் ஆணிடம் கேட்கும் ஒன்று.சீதனம் பெண் ஆணிடம் கேட்கும் ஒன்று.இவ்விரண்டும் எவ்வாறு ஒன்றாகும்?

மௌலவி தனது இன்னுமொரு வாதத்தில் மிகவும் எளிமையான வீட்டினைக் காட்டி இவ்வாறானதொரு வீட்டினைக் கட்டி ஒரு தந்தைக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாதா.?? எனக் கேட்டுள்ளார்.மௌலவி இவ்வாறான ஒரு வீட்டினைக் கட்டித் தாருங்கள் என்று கேட்பதை விட கேட்காமலேயே இருப்பார்கள்.எளிமையான திருமணக் கலாச்சாரம் சீதனத்தினை அடியோடு அளித்து விடும்.நாம் விரும்பியதைக் கொடுத்து திருமணம் முடிப்பதென்றால் இவ்வாறான எளிமையான வீட்டினைக் கட்டிக் கொடுக்கலாம்.வருபவர் கேட்கும் போது திருமனத்திற்கு அவ்வாறு தானே கட்டிக் கொடுக்க வேண்டும்? இது தானே பிரச்சினை.இங்கே தானே இடிக்கின்றது.

சீதனம் ஹாராம் எனும் போது சீதனம் வாங்கி திருமணம் செய்தோர் திருமணம் ஹராம் ஆகிவிடும்.அவர்கள் குழந்தைகள்? என பாவப் பட்டியல் நீண்டு கொண்டே செல்லலாம்.மௌலவி அவர்கள் இங்கு ஒரு விடயத்தினைக் கவனிக்க வேண்டும்.யாவரும செய்ததால் பிழை சரியாகி விடாது.இவர்கள் திருமணத்தினை இறைவன் பார்த்துக் கொள்வான்.அதற்கான நாமும் இப் பிழையினைத் தொடர முடியாது.இதனைத் தான் அல்லாஹ்வினை நபியவர்கள் வணங்குமாறு கூறிய போது அன்றைய காபிர் எங்கள் மூதாதேயர்கள் என்ன வழி கேடர்களா எனக் கேட்டார்கள்.இதே வினாவினையே இன்று மௌலவி கேட்டுள்ளார்.

மௌலவி தனது வாதத்தில் அன்னை ஹதீஜா வீட்டில் நபியவர்கள் வாழ்ந்தார்கள் என தனது சீதன பத்வாவிற்கு ஆதாரமாக காட்டுகிறார்.நன்றாக ஒன்றினை மௌலவி விளங்கிக் கொள்ள வேண்டும்.அன்னை ஹதீஜா ரழி அவர்கள் தான் நபியவர்களினை திருமணத்திற்கு அழைத்தார்.நபியவர்கள் சீதனத்தினைப் பேசி திருமணம் செய்யவில்லை.ஆனால்,இன்று சீதனம் கேட்பவர்கள் பெண் வீட்டாரிடம் சீதனப் பேச்சு வார்த்தை செய்த பின்பே திருமணம் செய்கிறார்கள்.இவாறு நிலைமை இருக்க எவ்வாறு இதற்கு முடிச்சுப் போடலாம்..?? பெண் வீட்டார் உவர்ந்து அளிப்பது ஒரு போதும் சீதனம் ஆகாது இதனை மௌலவி நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு தந்தை தனது மகளிற்கு அதிகம் சொத்து வழங்க வேண்டும்.இது மௌலவியின் ஒரு வாதம்.இதற்கு மௌலவி கூறிய நியாயம் “ஒரு ஆணினை தனது மனைவி விரட்டினால் எங்கேயாவது சென்று படுத்துறங்கி வாழ்ந்து விடுவான்.பெண் என்ன செய்வது?” என்பதாகும்.இப் பிரச்சனைத் தீர்விற்கு மகளிற்கு அதிகம் சொத்தினை வழங்கினால் சரியாகிவிடும் என்பதாகும்.சொத்துப் பங்கீடு விடயத்திற்கு வருவோம் ஒருவர் மரணித்து விட்டால் அவரது சொத்தில் ஆணிற்கே  அதிகம் வழங்குமாறு இஸ்லாம் கட்டளை இடுகிறது.அல்லாஹ்விற்கு ஒரு பெண்ணின் கணவன் மரணித்து விட்டால் அப் பெண் நடுத்தெருவில் இருப்பாள் என்பது தெரியாது என மௌலவி கூற வருகிறாரா..?? மௌலவி அவ்வர்களே இஸ்லாத்தின் படி திருமணம் செய்திருந்தால் அப் பெண் நடுத்தெருவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.உங்களிற்கு தெளிவான இஸ்லாமிய அறிவு யுப்பின் அது என்ன எனக் கூறுங்கள் பார்க்கலாம்.

மௌலவியிடம் சுருக்கமாக கேட்பதென்றால்

திருமணம் என்பது இறைவன் கட்டளைக்காக செய்யும் ஒரு விடயம்.அவ் விடயத்தில் நாம் நமக்கு உரிமை இல்லாத ஒருவரின் சொத்துக்களினைக் கேட்பது எந்த விதத்தில் நியாயம்..?? இதனை நாம் எமது சொத்துகளினை அதிகரிக்கும் ஒன்றாக குறிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்?