மானம் போனாலும் போகட்டும் பதவிதான் முக்கியம் என்றிருப்பவருக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன..?

நிழலான நிஜங்கள்- நடந்தது என்ன? (பகுதி 6)

 

ஓடாதே, நில்
********************
(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)
*****
அல்லாஹ் ஒரு நேர்மையான பத்திரிகையாளனுக்கு ஒரு அழகான அறிவுரையைக் கூறுகிறான்.

‘’ முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்’’. (அல் குர்ஆன் 49:6)

இந்த வசனத்தை நான் அடிக்கடி எனக்குள் ஞாபகப்படுத்திக்கொள்வதுண்டு.நான் இத்தொடரில் கூறும் சம்பவங்கள் வெற்று யூகங்களாக இருக்கக்கூடாது அவை நிரூபிக்கப்பட்ட உண்மைகளாக இருக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனத்துடன் இருந்தேன். இருக்கிறேன்.இருப்பேன்.

இத்தொடரில் இதுவரைக்கும் நான் எழுதிய தகவல்கள் ஏற்கனவே பலரால் அறியப்பட்டவையாக இருப்பினும்,இனி நான் சொல்லப்போகும் செய்திகள் விரல் விட்டு எண்ணக்கூடிய மிகவும் சிலருக்கு மாத்திரம் தெரிந்த உண்மைகள்.குமாரி கூரேயின் விவகாரத்தில் இது வரைக்கும் இந்த முழு உலகும் நம்பிக்கொண்டு வந்த விடயங்களைக் கீலம் கீலங்களாகக் கிழித்தெறியும் உண்மைகள்.பலரை முகம் குப்புற வீழ்த்தி மீளவே முடியாத அவமானத்தில் ஆழ்த்த வல்ல விவகாரங்கள். பலரின் போலி முகங்களைப் பிய்த்தெறியும் உண்மைகள். தன்னை நல்லவனாகக் காட்டிக்கொண்டு எமது மக்களை ஏமாற்றிப்பிழைக்கும் ஒரு கொடியவனின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்ட எனக்கு வழிகாட்டு ஆண்டவா என்ற எனது தொடரான பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என நினைக்கிறேன்.நான் சொல்லப்போகின்ற விடயங்களுக்கான ஆதாரங்களை நான் என் கண்களால் கண்ட திருப்தியில் எழுத ஆரம்பிக்கிறேன்.இத்தனை ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று ஹக்கீமுக்குக் கூட தெரியாது என நினைக்கிறேன். 

இந்தத் தொடர் முடிந்ததும் மாப்பிள்ளை வீட்டாருக்கு காப்பி கொடுக்க வந்த மணப்பெண்ணின் முகத்தைப் போலதான் ஆயுள் முழுவதும் ஹக்கீம் தலைநிமிர முடியாமல் போக நேரிடும்.உண்மைகளை பொய்யைக்கொண்டு தாலாட்டி சிறிது நேரம் தூங்கவைக்கலாம்.சாகவைக்க முடியாது.அது தூக்கம் கலைந்து எழுந்துவிட்டால் தன்னைப் புதைக்க நினைத்தவர்களைப் பொசுக்கி விடும்.இதுதான் இன்று ஹக்கீமிற்கு நடக்கிறது.சரி கதைக்கு வருவோம்.

தனது கட்சி உறுப்பினர்களைச் சந்தித்து குமாரி தனக்கு நீதி கேட்கிறார் என்பதை அறிந்த ஹக்கீம் ஏற்கனவே தொலைபேசியில் குமாரியை மிரட்டியிருந்தார். பாராளுமன்றத்தில் கடிதத்தைக் கையளித்ததன் பின்னர் நடந்த வாக்கெடுப்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒரு வாக்கினால் தோல்வியடைந்ததை அடுத்து தனக்கு வரப்போகும் ஆபத்தை உணர்ந்தவராக குமாரி கூரே ஏற்கனவே ஜனாதிபதி புக் செய்திருந்த இன்டகொன்டினென்டல் ஹோட்டலில் தலை மறைவாக இருந்தார்.

பாராளுமன்றத்தில் குமாரியிடம் இருந்து கடிதத்தை வாங்கிக்கொண்ட ஹக்கீம் இத்தனை தூரம் இது பெரிதாக வெடித்ததன் பின்னர் தன்னால் இனி தனியாக இவற்றை அணுக முடியாது என்று தளபதியின் உதவியை நாடியிருந்தார்.தளபதி ஹக்கீமின் வீட்டிற்கு விரைந்தார்.அதுவரைக்கும் குமாரி கூரேயின் விவகாரம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.ஹக்கீம் நடந்த விபரங்களைக் கூறிய பிறகுதான் இதன் பாரதூரம் புலப்பட்டது.

குமாரி கூரேயை ஏற்கனவே 2004 ஏப்ரல் 13ம் திகதி தற்செயலாகச் சந்தித்த அந்த நான்கு உறுப்பினர்களும் குமாரியிடம் விபரத்தைக் கேட்டறிந்ததன் பின்னர் ஹக்கீமிடம் இவ்விவகாரத்தை விளக்கி இது கட்சிக்குப் பெரிய அவமானத்தை ஈட்டித்தரும் என்று விளக்கியிருந்தார்கள். இது எனது தனிப்பட்ட விடயம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஹக்கீம் தட்டிக்கழித்திருந்தார்.

விவகாரம் ஒருபுறம் அரசாங்கத்திற்கு தெரிந்துவிட்டது, மறுபுறம் சந்திரிக்காவிடம் போய்ச்சேர்ந்துவிட வேண்டும் என்று பிடித்த பிடியாக இருக்கும் அந்த 4 எம்பிக்களுக்கும் தெரிந்துவிட்டது.பாராளுமன்றத்திற்குள் புகுந்து ஹக்கீமை வாக்களிக்க வற்புறுத்தும் நிலைக்கு விவகாரம் சென்றுவிட்டது.விடயம் மிகவும் பெரிதாகி விட்டது.இது வெளியே கசியுமாக இருந்தால் காங்கிறசின் மானம் கொடி கட்டிப்பறந்து விடும் என்பதை தளபதி நன்கறிவார்.இதனை முறியடிக்க ஒரே ஒரு வழிதான் இருந்தது.

எவ்வாறு குமாரியின் உண்மைச் சம்பவத்தை அவர்கள் ஹக்கீமுக்கு எதிராகப் பாவித்தார்களோ அதே குமாரி கூரேயை வைத்துத்தான் இதனை முறியடிக்கவேண்டும். அதைத் தவிர வேறு ஒரு வழி இருக்கவில்லை.அது மாத்திரமல்லாது இது வரைக்கும் என்ன நடந்திருக்கிறது, குமாரியை யார் யார் சந்தித்திருக்கிறார்கள்,இது யார் யாருக்குத் தெரியும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.குமாரியை எப்படி வரவழைப்பது?

இந்த விடயத்தை முடிப்பதற்கு நாம் குமாரியைச் சந்திக்க வேண்டும் என்றார் தளபதி.ஏற்கனே அத்துவிட்ட சனியனை மீண்டும் அழைப்பதா அது சரிவராது என்றார் தலைவர்.தான் ஏற்கனவே திருமணம் முடிப்பதாக வாக்களித்து,அவள் தன் மீது வைத்திருக்கும் உண்மையான காதலைப் பாவித்து, அவளை அங்குலம் அங்குலமாக அனுபவித்து மகிழ்ந்துவிட்டு கைகழுவி விட்டதன் பின் இன்னும் ஒரு முறை அவளை அழைத்தால் எப்படி வருவாள் என்பதுதான் ஹக்கீமின் கேள்வி.

‘உங்கள் வசீகரத்தை இன்னொரு முறை பயன்படுத்துங்கள்’-என்றார் தளபதி.

மானம் போனாலும் போகட்டும் பதவிதான் முக்கியம் என்றிருப்பவருக்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.வேறு வழியில்லாமல் அவளை மீண்டும் ஏமாற்ற முடிவு செய்தார் குர்ஆனையும், சுன்னாவையும் யாப்பாகக் கொண்ட முஸ்லிம் கட்சியின் தலைவர்.

குமாரி கூரேயைத் தேடும் படலம் ஆரம்பித்தது.

குமாரி கூரேக்காக ஹக்கீம் கொல்லுபிட்டியில் ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்திருந்தார்.அந்த வீட்டின் முகவரி இல.5/6,ப்ரெட்ரிஸ் வீதி,ரோயல் கோட்,கொழும்பு 03.அத்தோடு குமாரிக்கு ஹக்கீம் அவர்கள் நீல நிற டைஹெட்சு (daihatsu jeep) ஜீப் ஒன்றையும் வாங்கிக்கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாது குமாரியைப் பராமரிப்பதற்காக ஒரு சிங்களத் தம்பதியினரையும் வேலைக்கு அமர்த்தியிருந்தார். கணவனின் பெயர் நெலும்.மனைவியின் பெயர் சந்தனா.அவர்கள் இப்பொழுது எல்விடிகலயில் வசிக்கிறார்கள்.அவர்களின் மூலமாகவும் குமாரியைத் தேடும் முயற்சி நடந்தது.ஹக்கீம் அவர்களின் சகோதரர் ஹஸீர் அவர்களும் இந்த தேடலில் ஈடுபட்டிருந்தார். இறுதியாக ஹக்கீமை குமாரி ஓபரோய்-கிறஸ்கட்டில் இருக்கும் ஒரு இடத்தில் சந்தித்து மறுநாள் இன்னொரு பிரமுகரின் வீட்டில் சந்திப்பதாக முடிவு செய்தனர்.

‘நடந்ததைக் கூறுங்கள்’ என்று குமாரி கேட்டுக்கொள்ளப்பட்டார்.

குமாரி தனது கதையைக் கூற ஆரம்பித்தார்.

அந்தக் கதைதான் 2004ற்குப் பின்னரான முஸ்லீம் காங்கிறசின் கதை.இலங்கை முஸ்லீம் சமூகம் ஹக்கீம் என்ற ஒரு தனிமனிதனின் காம வேட்கைக்காக விற்கப்பட்ட கதை.பாவப்பட்ட உங்களதும்,எனதும் அரசியல் கதை. இலங்கை முஸ்லீம்களுக்கு அநியாயம் நடந்தபோதெல்லாம் காங்கிறஸ் அமைதியாக இருந்ததன் காரணக்கதை.ஒரு அப்பாவி அபலையின் காதல் கதை.

குமாரி தனது கதையை ஆரம்பித்தார்.

எனது பெயர் மேரியன் குமாரி லங்கா கூரே..
(தொடரும்)

RAAZI MUHAMMADH JAABIR