சுய புத்தி இல்லாத, கிழக்கைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளை என்ன செய்வது ?

 கட்டாய உயர் பீட கூட்டத்தில், புதிய செயலாளர் பதவி பற்றி குறிப்பிட்ட ஹகீம் அவர்கள், இந்த பதவி எவ்வாறாயினும் உருவாக்கப்பட வேண்டும் என்பதனால், அவரை நியமிக்கும் அதிகாரம் தலைவருக்கு உள்ள போதும், அவரை விலக்கும் அதிகாரம் உயர் பீடத்திற்கு இருக்கும் என்றார்.
இதைக்கேட்ட ஒரு மாகாண சபை உறுப்பினர் (அக்/ சேர்ந்தவர் அல்ல ) ஒருவர் எழுந்து தேவையில்லை,  தேவையில்லை அது எல்லாமே ஒங்களுக்கிட்டயே இருக்கட்டும், நீங்க பார்த்து எல்லாவற்றையும் செய்யுங்கள்,  என்றார்.
கிழக்கின் எழுச்சி தலைமைத்துவம் கிழக்கிற்கு வரவேண்டும் என்பதில் குறியாக இருந்ததே ஒழிய, கிழக்கில் உள்ள ஏனைய பிரமுகர்களைத் தாமாகவே விமர்சிக்கவில்லை.
ஆனால் இந்த மாதிரியான, சுய புத்தி இல்லாத, கிழக்கைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளை என்ன செய்வது?
தலைவரே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார் என்றால் நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள்?
மு.கா என்பது, பதவியாசையும், பணத்தாசையும், சுயநலமும், கிழக்கு விரோதப் போக்கும், இஸ்லாமிய விரோத பண்புகளும் புரையோடிப் போயுள்ள ஒரு சமூக விரோத கும்பலின் கூடாரம் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த கிழக்கின் எழுச்சிக்கு அதிக காலம் எடுக்கவில்லை.
அடுத்தது என்ன என்பதில் மிகவும் கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டியுள்ளது. மு.கா தவிர்ந்த ஏனையவர்களும் சுத்தமானவர்கள் இல்லை என்பதால், இவர்களைக் கொண்டு அரசியல் மாற்றம் செய்வதிலும் பிரயோசனம் இல்லை. ஆனால் இவர்களில் பலர் இன்னும் மக்கள் செல்வாக்குடன் இருக்கின்றார்கள்.
இரண்டுக்கும் நடுவே ஒரு நிலையை எடுப்பது உசிதமானதா என்ற விடயமே தற்போது கருத்தாடலுக்கு உட்பட்டிருக்கின்றது.
அஷூர் சேகு இஸ்ஸதீன் 
செயலாளர் 
கிழக்கின் எழுச்சி