அதிகார மமதையில் இறைவனை மறந்த அரக்கனே! வா.இனி ஒரு முறை எங்கள் மண்ணுக்கு வா…

உண்மை சுடும்

குமாரி கூரேயைப் பற்றிய உண்மைகளை எனதிறைவன் எனக்குத் தெரிவிக்காமலே இருந்திருக்கவேண்டுமே என்று நினைத்துக்கொள்கிறேன்.

என்ன இந்த விவகாரம் என்று சும்மா தேடிப்பார்பதற்காகதான் ஆரம்பித்தேன்.ஒரு இருண்ட கதவைத் திறந்தால் இன்னொரு கதவு திறக்கிறது.ஒரு ரகசியம் இன்னொரு ரகசியத்திற்கு இட்டுச்செல்கிறது. டேன் பிரவ்னின் நாவல்களைப்போல.

மனம் சொல்ல முடியாத உணர்வுகளால் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது. கோபமும் சோகமும் மாறி மாறி மனக்கரையில் அலைபுரண்டோடுகிறது. உண்மையின் ஒளிக்கீற்றுகள் அறியாமையின் இருளைக் கிழித்துக்கொண்டு செல்லும்போது ஏற்படும் உணர்வு பயங்கரமானது.உண்மை தன் வாளைக்கொண்டு வெட்டுவதுபோல் வலிக்கிறது.அறியாமை எவ்வளவு இன்பமானது.

தன்னை ஒருவன் காதலில் ஏமாற்றிவிட்டான் என்று தெரிந்தும் அவனை விட்டு விலகி ஓடும் பெண்களுக்கு மத்தியில் தன்னை ஏமாற்றுகிறான்,தன் காமப்பசிக்காக தன் உடம்பைப் பாவிக்கிறான் என்று தெரிந்தும், தான் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுவதை அறிந்தும் ‘பரவாயில்லை இவன்தான் இனி என் வாழ்க்கை என்று ‘அவன்’ கதவடியில் மீண்டும் மீண்டும் கண்ணீரோடு நின்று விட்டு ஏமாற்றத்தோடு திரும்பிவரும் அந்த அப்பாவி அபலையின் சோகக் கதையைக் கேட்டு இதயம் பாரமாய்க்கனக்கிறது. 

குமாரி கூரே ஒரு பயங்கரமான புத்தகத்தின் வெறும் அத்தியாயம் மாத்திரம்தான் என்பது தெரிய வரும்போது மனம் உடைந்துவிடுகிறது.

அந்தக் காதலுக்காக தன் குடும்பத்தையும் இழந்துவிட்டு,தன் கணவனையும் பிரிந்துவிட்டு வெள்ளவத்தையில் உமக்காக இஸ்லாம் கற்கப்போனவளையா நீர் ஏமாற்றினீர் அமைச்சரே?

நீர் அன்று அவள் காலில் விழுந்து மடிப்பிச்சை கேட்டதற்காக அவள் செய்த உதவியால்தானே இன்றுவரை காங்கிறஸ் என்ற கட்சி உயிரோடு இருக்கிறது. அன்று அவள் உமக்குப் போட்ட மடிப்பிச்சைதானே காங்கிறஸ் மறந்துவிட்டீரா அமைச்சரே?

எங்கள் மக்களின் அபிலாசைகளையெல்லாம் ஒரு பெண்ணின் காலடியில் உடம்புச் சுகத்திற்காக மண்டியிடவைத்த கேவலமான மனிதரா நீர்?

இனியும் தாங்கமுடியாமல் தன் காதலுக்காக அக்னியிடம் அடைக்கலம் தேடிய( இதிலே எனக்கு இன்னமும் சந்தேகம் இருக்கிறது) அந்தப் பெண்ணையா நீர் இறுதியில் புத்தி பேதலித்தவள் என்றீர்?

அவள் எரிந்து எரிந்து கருகி விழும்போது சத்தமிட்டுக்கத்திய அந்த நாலெழுத்து வார்த்தையை மறந்துவிட்டீரா அமைச்சரே?

பொறுத்திரும்.பொறுத்திரும்.உமக்கு நாம் ஞாபகப்படுத்துவோம்.அனைத்தையும் ஒரு முறை ஞாபகப்படுத்துவோம்..

ஒரு அப்பாவியை விபச்சாரியாக்கிய உம் யோக்கியதையை உமக்கு ஞாபகப்படுத்துவோம்.

கப்பலில் கொடிகட்டிப்பறக்க இருந்த கட்சியின் மானத்தை காதலுக்காக காத்தவளின் கதையை உமக்கு ஞாபகப்படுத்துவோம்.

ஒரு சமூகம் தன்னால் அவமானப்படக்கூடாது என்பதற்காக தன் காதலையே அழித்துக்கொண்ட உம் காதலியை உமக்கு ஞாபகப்படுத்துவோம்..

காதலுக்கும்,காமத்திற்கும் வேலி போடத்தெரியாத உம் வெற்று வெறியை உமக்கு ஞாபகப்படுத்துவோம்.

கையேந்திப் பிச்சையெடுத்துக் கட்சி வளர்த்த அந்த நல்லவர்களை நீர் நடுவீதிக்குக் கொண்டுவந்த கதையை உமக்கு ஞாபகப்படுத்துவோம்.

பெண் பித்துப் பிடித்தலையும் உம்மைப் போன்ற பைத்தியங்களை தன் தலைமீது தூக்கிவைத்துக் கொண்டாடும் அந்தக் கண்மூடிகளுக்கு ஞாபகப்படுத்துவோம்.

‘’பிளக் லேபல்’’,அவள் வீட்டில் இருந்த நீர் வாங்கி வைத்த வைன் முட்டி,பிளவர் ரோட் வெள்ளைக்காரி எல்லோரையும் உமக்கு ஞாபகப்படுத்துவோம்.

எங்கள் கரையோர மாவட்டக் கனவை சிங்கள வாக்குகளுக்காக அடமானம் வைத்த கதையை எம் மக்களுக்கு நாம் ஞாபகப்படுத்துவோம்..

எமது மக்கள் அழும்போதும்,அழியும் போதும் மஹிந்தவின் காலைச் சுற்றி நீர் கிடந்த காரணத்தை ஞாபகப்படுத்துவோம்..

கிழக்கை வைத்து வாக்கை வாங்கி பின்னர் கிழக்கையே விற்கும் உம் கபட நாடகத்தை உமக்கு ஞாபகப்படுத்துவோம்..

நீர் முதுகிலும் முகத்திலும் அணிந்திருக்கும் ஆட்டுத்தோலை உரித்து அதற்குள் ஒழிந்து கொண்டிருக்கும் வெறி கொண்ட ஓநாயின் வேட்டைப் பற்களை நாம் வெளிச்சத்தில் காட்டுவோம்.

உமக்கு வேதம் ஓதும் சாத்தான்களின் ஊளைச்சத்தத்தை எம் மக்களின் காதுகளால் கேட்க வைப்போம்.

எமது மக்களின் காதுகளையும்,கண்களையும் நீர் கட்டிவிட்டிருக்கும் பில்லி சூனியத்தின் முடிச்சுக்களை எம் இறைவனின் வேதத்தை ஓதி அவிழ்த்துக்காட்டுவோம்.

நீர் இன்னும் நன்மை செய்வாய் என்று நம்பி அறியாமைச் சகதிக்குள் அகப்பட்டு மூச்சு முட்டிக்கொண்டிருக்கும் எமது மக்களை உண்மையின் கயிற்றைக் கொண்டு மீட்டுக்காட்டுவோம்.

தங்கள் புத்திகளை உம் வசியத்திடம் தொலைத்துவிட்ட உம் போராளிகள் இன்று எம்மைப் பைத்தியம் என்பார்கள்.இனி வரும் காலங்களில் மெது மெதுவாகப் புரிந்து கொள்வார்கள்.

எந்த மக்கள் உன்னைத் தங்கள் தோளில் சுமந்தார்களோ அந்த மக்களைக் கொண்டே உம்மைத் தூக்கிவீச வைப்போம்.

எமது குரல் வளைகளை உன் அதிகாரப்பற்கள் கடித்துக்குதறி எமது இரத்தத்தை எடுத்து உம் பதவிக் கடவுளுக்கு நீர் பாலபிஷேகம் செய்திடினும்,

எங்கள் பேனையை உடைத்து, எம்நரம்புகளை அறுத்து, எங்கள் விரல்களை நீர் இனிப் பிய்த்தெறிந்திடினும்,

எங்கள் கைகளிலிருந்த சுருட்டைப் பிடுங்கி விழிப்புணர்வையும், வேதத்தையும் ஊற்றிய பேனையை எம் விரலிடுக்குகளில் சொருகி வைத்த அந்த இறைவனின் மீது ஆணையாக நாம் உம்மை எதிர்ப்போம்.

எங்கள் நாக்குகளின் முடிச்சுக்களை அவிழ்த்து,அதில் உண்மையையும்,பயமில்லாத வீரத்தையும் தடவிய எங்கள் இறைவன் மீது ஆணையாக நாம் உம்மை எதிர்ப்போம்.

நீர் இதுவரை எங்களுக்கு மறைத்த உண்மை இனி உம்மைச் சுட்டே எரித்துவிடும்.

அதிகார மமதையில் இறைவனை மறந்த அரக்கனே, 

வா.இனி ஒரு முறை எங்கள் மண்ணுக்கு வா.ஒரு கை பார்த்துவிடலாம்.

Raazi Muhammadh Jaabir