ஹசனலியின் வெளியேற்றம் உணர்த்தும் உண்மைகள்

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பேராளர் மகா­நாடு கொழும்பில் நடை­பெற்­றது. இம்­ம­கா­நாட்­டின்­போது கட்­சியின் உயர் பத­வி­க­ளுக்­கான ஆட்கள் நிய­மனம் செய்­யப்­பட்­டார்கள். இதன்­போது செய­லாளர் நாய­க­மான ஹச­ன­லிக்கு ஏற்­க­னவே வாக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்டபடி அதி­காரம் பொருந்­திய செய­லாளர் பதவி வழங்­கப்­ப­டாமல் மகா­நாடு நடந்து முடிந்­தி­ருக்­கி­றது.

கட்­சியின் செய­லாளர் நாய­க­மாக ஹச­னலி நீண்­ட­காலம் பதவி வகித்­தவர். தலைவர் அஷ்ரப் காலத்­திலும் ஹக்கீம் காலத்­திலும் தமது தேவை கருதி கட்­சியை நாடி வந்த மக்­க­ளுக்குப் பல்­வேறு கடி­தங்­க­ளையும் ஆவ­ணங்­க­ளையும் இலட்சக் கணக்கில் தயா­ரித்து வழங்கி உத­வி­யவர். இனப்­பி­ரச்­சினைத் தீர்வு நட­வ­டிக்­கை­க­ளின்­போதும் வெளி­நாட்­டி­லி­ருந்து வருகை தரும் ஐ.நா.சபை போன்ற உயர் நிறு­வனப் பிர­தி­நி­தி­களைச் சந்­திப்­ப­திலும் அர­சாங்­கத்­து­ட­னான பல்­வேறு பேச்­சு­வார்த்­தை­களில் கட்சி சார்­பா­கவும் கலந்து கொண்­டவர். கட்­சியின் ஆவணக் களஞ்­சி­ய­மாக வர்­ணிக்­கப்­பட்­டவர்.  அஷ்ரப் இல்­லா­த­நி­லையில் கட்­சியின் போரா­ளிகள் இவரைக் கண்­டதும் அஷ்­ர­பாக  பார்ப்­ப­து­முண்டு. 

இப்­ப­டிப்­பட்ட முக்­கி­ய­மான ஒருவர் தேசியப் பட்­டியல் நிய­மனம் கேட்டார் என்ற கார­ணத்­திற்­காக பொருத்­த­மான பதவி வழங்­கப்­ப­டாமல் கட்­சியில் சாதா­ரண அங்­கத்­த­வ­ராக மாற்­றப்­பட்­டுள்ளார்.மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் 1981 ஆம் ஆண்டு காத்­தான்­கு­டியில் மு.கா வை ஆரம்­பித்தார். எனினும் அக்­கா­ல­கட்­டத்தில் கட்சி போதிய வளர்ச்சிபெற முடி­யாமல் கிடப்பில் போடப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் வெளி­நாட்­டி­லி­ருந்து தனது தொழிலை முடித்து  நாட்­டுக்கு வந்த ஹச­ன­லியும் அவ­ரு­டைய நண்­ப­ரான கட்­டடக் கலைஞர் எம்.ஐ.எம்.இஸ்­மாயில் என்­ப­வரும் அஷ்­ரபை சந்­தித்து முஸ்லிம் கட்­சி­யொன்றின் தேவை பற்றிக் கலந்­து­ரை­யா­டினர். இதன் தொடர்ச்­சி­யாக ஸ்ரீல­முகா தொடர்­பான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அன்­றி­லி­ருந்து இன்­று­வரை பல்­வேறு தியா­கங்­க­ளுக்கு மத்­தியில் ஹச­னலி போரா­ளி­களின் உத­வி­யோடு இக்­கட்­சியை வளர்த்­தெ­டுத்தார். 

இப்­ப­டிப்­பட்ட ஒரு­வ­ரையே அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தியை மீறி தேசி­யப்­பட்­டி­யலும் செய­லாளர் பத­வியும் வழங்­காமல் கட்சி ஒதுக்கி வைத்­துள்­ளது.குர்­ஆ­னையும் ஹதீ­ஸையும் அடிப்­ப­டையாகக் கொண்டு இயங்கும் ஒரு கட்சி இப்­படி நடந்து கொள்­வது பற்றி முஸ்­லிம்­க­ளுக்கு மத்­தி­யிலும் ஏனை­யோ­ருக்­கி­டை­யிலும் ஏமாற்­றங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.தேசியப் பட்­டியல் விட­யத்தில் தனி­ந­பர்கள் மட்­டு­மல்ல, பல இயக்­கங்­களும் கட்­சி­களும் கூட முஸ்லிம் காங்­கி­ர­சினால் ஏமாற்­றங்­களைச் சந்­தித்­துள்­ளன.

நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி என்­பது 2013 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டதும் கிழக்கு மாகாண அர­சி­யலில் நல்­லாட்சி என்ற சொல்லை முதன்­மு­தலில் பயன்­ப­டுத்­தி­ய­து­மான ஒரு அர­சியல் கட்சி ஆகும். வட­மா­கா­ண­ச­பையில் ஒரு உறுப்­பி­ன­ரையும் கொண்­டுள்­ளது.பொறி­யி­ய­லாளர் அப்துர் ரஹ்மான் தலை­மை­யி­லான இம்­முன்­ன­ணி­யுடன் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் மு.கா. தேர்தல் ஒப்­பந்­த­மொன்றைச் செய்து கொண்டு ஒரு ஆச­னத்தைப் பெற்றுக் கொண்­டது. மு.கா.வின் அலி சாகிர் மௌலானா உறுப்­பி­ன­ரானார். இந்த வெற்­றியை மட்­டக்­க­ளப்பில் பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போயி­ருந்தால் மு.கா. வின் இன்­றை­ய­நிலை தலை­கீ­ழாக மாறி­யி­ருக்கும்.

தேசி­யப்­பட்­டியல் எண்­ணிக்­கை­கூட ஒன்­றாகக் குறைந்­தி­ருக்கும்இப்­ப­டிப்­பட்ட முக்­கி­ய­மான வெற்­றியைப் பெற்றுக் கொடுத்த நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணிக்கு ஒப்­பந்­தப்­படி தேசியப் பட்­டியல் வழங்­காமல் மு.கா. ஏமாற்­றி­யது. எனவே கட்­சியின் செய­லாளர் நாயகம் ஏமாற்­றப்­ப­டு­வது ஒன்றும் பெரிய விட­ய­மல்ல. ஹச­னலி தன்­னி­ட­மி­ருந்து பறிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீண்டும் தனக்கு வழங்­கும்­படி கேட்டார் என்­பது அவ­ருக்­கெ­தி­ரான மற்­று­மொரு குற்­றச்­சாட்­டாகும். 

தலைவர் அஷ்­ர­புக்குத் தேவைப்­ப­டாத அதி­காரம் ஹக்­கீ­முக்கு ஏன் இப்­போது தேவைப்­ப­டு­கி­றது என்­ப­துதான் எல்­லோ­ரு­டை­யதும் கேள்­வி­யாகும். தலைவர் அஷ்­ர­பு­டைய காலத்தில் 23 உயர்­பீட உறுப்­பி­னர்­களே இருந்­தனர். தற்­போது 90 இற்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­களைக் கொண்­டுள்ள நிலை­யிலும் தான் விரும்பும் விட­யத்தை நிறை­வேற்­றிக்­கொள்ள கட்­சி­யிலும் உச்­ச­பீ­டத்­திலும் போதிய வச­திகள் இருக்­கும்­ நி­லை­யிலும் ஏன் ஹச­ன­லியின் அதி­காரம் பறிக்­கப்­பட்­டது என்­ப­து­பற்றி இப்­போது மக்கள் யோசிக்கத் தொடங்­கி­யுள்­ளார்கள்.

கட்­சியின் மூத்த உறுப்­பி­னர்­களை ஒவ்­வொ­ரு­வ­ராக வெளி­யேற்றும் முயற்சி படிப்­ப­டி­யாக நிறை­வேறி வருகிறதென்று உயர்பீட உறுப்பினர்களும் இப்போது உணரத் தொடங்கியுள்ளார்கள். எஞ்சியுள்ள ஒன்றிரண்டு கிழக்கு மாகாண முக்கிய உறுப்பினர்கள்  அடுத்த வெட்டு தமக்கே என்று தமது நாட்களை எண்ணத் தொடங்கியுள்ளார்கள்.அதிகாரத்தைச் சுவைத்துப் பழகியவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை இழக்க விரும்ப மாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.  எப்படியும் ஜனாதிபதித் தேர்தலை வென்று விடுவார் என்று நம்பப்பட்ட மஹிந்த தோற்கடிக்கப்பட்டதும் பிரபாகரனின் கதை முடிவுக்கு வந்ததும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஏ.பீர் முகம்­மது