யுகத்தின் தஜ்ஜால்கள் வழி செல்வோர் உண்மையான தஜ்ஜாலிடம் வசமாக மாட்டிக் கொள்வார்கள்.
அல்லாஹ் அஞ்சிக் கொள்வோவோம்.
பொய்களில் மாயைகளில் மதிமயங்கி சௌகாரியங்களுக்காக, சுக போகங்களுக்காக சத்தியத்தை நிராகரித்து அசத்தியத்தை பசுமையாகவும் சத்தியத்தை தீயாகவும் பார்கின்ற ஒரு சமூகம் தஜ்ஜாலின் சதி வலைகளில் சிக்கிவிடும்.
உலகின் சுக போகங்களுக்காக, செல்வம் செல்வாக்குகளுக்காக, அதிகாரம் அந்தஸ்த்துக்களுக்காக அசத்தியத்தின் வழி செல்லாது..
தீயை கையால் அள்ளுகின்ற நிலைபோல் இருந்தாலும் ஈமானில் பற்றுதியுடன் இருக்க எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு துணை புரிவானாக.!
சமூகத்திலும் சமூக ஊடகங்களிலும் எமது எழுத்தும் பேச்சும்,வாதப் பிரதிவாதங்களும், நடத்தைகளும், ஆதரவுகளும் அங்கீகாரங்களும் இச்சைகள் வழி செல்லாமல் இறையச்சத்தின் வழி செல்ல எல்லாம் வல்ல நாயன் துணை நிற்பானாக..
இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை.
பொய்களை உண்மைகள் போல் சித்தரித்து மாயைகளுக்குள் மனிதர்களை மதிமயக்கி சிக்க வைத்து அழிவின் பால் அழைத்துச் செல்வான். பகிரங்கமாக அவனது நெற்றியில் அவன் காபிர் என்று எழுத்தப் பட்டிருந்தாலும் ஈமானிய பலவீனர்கள் அவனுடன் அள்ளுண்டு செல்வார்கள்.
உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), ‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும்.
மக்கள் எதை ‘இது நெருப்பு’ என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை ‘இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
புஹாரி : 3450 ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).
நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).
AS – shaik Inmaullah Masihudeen