பயம் ஒரு சமூகத்தின் உள்ளத்தை ஆட்கொள்ளுமாக இருந்தால், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருபதாக அது எண்ணிக் கொண்டிருக்குமாக இருந்தால் அதுவே அச்சமூகத்திற்கு வழங்க படும் உச்ச கட்ட தண்டனையாகும் . இலங்கை முஸ்லிங்கள் கடந்த 05 வருட காலங்களாக அவவ்விரண்டையும் தான் அதன் அரசியல் தலைவர்களிடமிருந்து பரிசாக பெற்றுள்ளனர்.
இனவாதத்தால் தமது நிம்மதியை இழந்து அதிகமாகவே நொந்து போயிருந்த முஸ்லிங்கள் அதனை ஒழிப்பதற்காகவே நல்லாட்சி வேட்பாளரை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். அள்ளாஹ்வின் உதவியுடன் ஒற்றுமையாக செயற்பட்டு இனவாதத்தை உமிழ்ந்த ஆட்சியாளர்களை தூக்கி எறிந்தனர்.
எனினும் நல்லாட்சியிலும் இனவாதம் என்ற கொடூரம் குறைந்ததாய் இல்லை. அது கள்ளாட்சியாக மாறி விட்டது என்பதே மிக பொருத்தமான கூற்றாகும். ஆகவே இறுதி நேரத்தில் வழங்கப் படும் பொய்யான வாக்குறுதிகளையும் பசப்பு வார்த்தைகளையும் நம்பி அடுத்த தேர்தலின் போது மீண்டும் ஏமார்ந்து பொய்யர்களையும் ஏமாற்று காரர்களையும் தெரிவு செய்வதை முஸ்லிங்கள் தவிர்க்க வேண்டுமானால் இன்றே அடுத்த தேர்தல் பற்றி சிந்திக்க வேண்டும்.
100 வீதம் நீதம் பேணி, இலங்கையின் சகல இன மக்களையும் சரிசமமாக நடாத்த பொருத்தமான ஆட்சியாளர்களை தேடும் காலம் மலையேறி விட்டது. இலங்கை அரசியலில் அவ்வாரான ஆட்சியாளர்களை தெரிவு செய்வதென்பது இனி நடைபெறப் போவதில்லை. ஏனெனில் ராஜபக்ஷேக்களின் ஆட்சியில் போடப் பட்ட உறுதியான இனவாத அஸ்திவாரம் நிலத்தடியில் போடப்பட்டதல்ல. அதுபல ஆயிரம் பெளத்த உள்ளங்களில் விதைக்கப்பட்டுள்ளது.
அந்த விதை தான் தம்புள்ளயில் துளிர் விட்டு, தர்கா நகர், கொழும்பு, கண்டி, பதுளை, மட்டகளப்பு, கல்ஹின்னை என பல முஸ்லிம் பகுதிகளில் வேகமாக கிளை விட்டு இன்று தம்புள்ளயின் பக்கம் மீண்டு வந்துள்ளது. ஆம் இன்று ( 09/02/2017 ) தம்புள்ளை நகரின் சகல முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் இனவாதிகளின் அச்சுறுத்தல்களினால் மூடப்பட்டிருப்பது எம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? குறித்த இனவாத விதையை முழுமையாக அகழ்தெடுத்து முற்றுப்புள்ளி வைப்பதென்பது இதன் பிறகு முடியாத காரியமாக இருக்குமோ எனும் அளவிற்கு அது நன்றாக தீனி போட பட்டு வளர்க்கப் பட்டு விட்டது.
இனவாதத்தை அடியோடு அகற்றுவோம் எனும் உறுதிமொழியுடன் யாரேனும் இனி ஆட்சி கதிரையில் அமர்ந்தால் கூட அவ்வாரானவர்கள் சந்திக்கும் அழுத்தங்களால் நீதமான ஆட்சியை அவர்களால் நடைமுறை படுத்த முடியாது போய்விடலாம் எனும் அளவு நிலமை மாறி விட்டிருப்பது போல் தெரிகின்றது.
ஆகவே திரும்பவும் அரியணையில் ஏற துடிக்கும் இனவாத்தை தோற்றுவித்த ராஜபக்ஷேக்களையும் நல்லாட்சி என்ற பெயரால் முஸ்லிங்களின் முதுகில் மீண்டும் மீண்டும் குத்திகொண்டிருப்போரையும் உதறி தள்ளி விட்டு சிறுபான்மை சமூகங்களும் ஓரளவேனும் நிம்மதியாக வாழ வழிவகை செய்யும் ( புதிய ) ஆட்சியாளர்கள் அடுத்த முறை தெரிவு செய்ய படுவதற்கான யூகங்கள் சிறுபான்மையினர்களால் இப்போதிருந்தே வகுக்க பட வேண்டும். அத்துடன் பலவீனப் பட்டு போயுள்ள அள்ளாஹ்வுடனான உறவு மென்மேலும் பலப் படுத்த பட வேண்டும்.
மனித சமூகத்திற்கு முதன் முதலில் தேவை படுவது நிம்மதியும் அச்சமற்ற பாதுகாப்பான சூழலுமே. அவற்றை பறித்து கொண்டு அச்சமூகத்துள் வெறும் உட்கட்டமைப்பு வசதிகளையோ, தொழில் வாய்ப்பையோ ஏற்படுத்துவது ஒரு போதும் வெற்றியளிக்க போவதில்லை.
பயம் ஒரு சமூகத்தின் உள்ளத்தை ஆட்கொள்ளுமாக இருந்தால், பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருபதாக அது எண்ணிக் கொண்டிருக்குமாக இருந்தால் அது தான் அச்சமூகத்திற்கு வழங்க படும் உச்ச கட்ட தண்டனையாகும் . இலங்கை முஸ்லிங்கள் கடந்த 05 வருட காலமாக அவ்விரண்டையும் தான் அதன் அரசியல் தலைவர்களிடமிருந்து பரிசாக பெற்றுள்ளனர்.
அஷ் ஷெய்க் ஷfபீக் zஸுபைர்
பிரதம இமாமும் தஃவா அழைப்பாளரும் – அல் ஹிதாயா மஸ்ஜித், க்ரொய்டன். தெற்கு லண்டன்