இதய நோயாளர்களுக்கு உடனடியாக வழங்கக் கூடிய மருந்து வகையொன்றை இறக்குமதி செய்வது குறித்து சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
மாரடைப்பு ஏற்படும் நபர் ஒருவருக்கு இந்த மருந்தை உடனடியாக வழங்குவதன் மூலம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த மருந்தை மாரடைப்பு ஏற்பட்டு 03 மணித்தியாலங்களுக்குள் வழங்க வேண்டும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மாரடைப்பை குணப்படுத்தும் இந்த மருந்தின் தற்போதைய விலை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா ஆகும்.
எனவே குறித்த மருந்தை குறைந்த விலைக்கு இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதய நோய் சம்பந்தமான விசேட நிபுணர்கள் சங்கத்துடன் சுகாதார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.