என் உடன் பிறப்பே , எது துரோகம்? எனக்குத் தெரிந்ததை உனக்குச் சொல்வேன், தீர்ப்பை நீயே தேடிக்கொள்

எது துரோகம்?

அன்புள்ள என் உடன் பிறப்பே,

இன்றிலிருந்து பேராளர் மாநாடு முடியும் வரைக்கும் ஓரிரு முறை உன்னோடு நான் பேசுவேன்.எனக்குத் தெரிந்ததை உனக்குச் சொல்வேன்.தீர்ப்பை நீயே தேடிக்கொள்.

என் உடன்பிறப்பே உன் இதயத்தைத் தொட்டுச்சொல்.
தவிசாளர் பொய் சொல்கிறார்.எனது தலைவன் தூய்மையானவன்.. தவிசாளர் தலைவரைப் பற்றி அவதூறு கூறுகிறார்.அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று சொல்லும் தைரியம் உனக்கு இருக்கிறதா? நீ உரத்துச் சொல்.நீ போஷிக்கும் உன் தலைவர்களுக்கு இருக்கிறதா தைரியமாகச் சொல்.

இதில் ஏதோ ஒரு வகை உண்மை இருக்கிறது என்று அவர்கள் எல்லோருக்கும் தெரியும்.ஆகக் குறைந்தது மேல்மட்ட தலைவர்களுக்கு தெளிவாகத் தெரியும். இதுவரைக்கும் தவிசாளருக்கு எதிராக அறிக்கை விட்ட தலைவர்கள் எல்லாம் ‘ஏலுமென்றால் அவர் அவ்வீடியோக்களை வெளியிடட்டும் என்று அறிக்கை விடவில்லையே அவதானித்தாயா உடன்பிறப்பே. 

தவிசாளர் துரோகி.அசிங்கங்கள் பேசித்தீர்க்கப்படவேண்டும்.அவை பகிரங்கப்படுத்தக்கூடாது என்ற தொனியிலேயே பேசுகிறார்களே ஒழிய இருந்தால் வெளியிடு பார்ப்போம் என்று சொல்லும் தைரியம் அவர்களுக்கு இருக்கிறது என நீ நினைக்கிறாயா என் உடன்பிறப்பே.

இனி தவிசாளரைத் துரோகியாகக் காட்டி,பதவி வெறியனாகக் காட்டி,அந்தப் புகையில்,அந்த மாயையில்,அந்த இருட்டில், உனது தலைவனின் லீலைகளைப் புதைத்து மறைத்துவிடும் நாடகம் நடந்து கொண்டிருக்கிறது நீ எங்கே இருக்கிறாய் என் உடன்பிறப்பே. ஏதாவது செய்து தவிசாளரை அமைதிப்படுத்திவிட்டு உன்னை இதையும் கடந்து போக விடும் ஏற்பாடு நடக்கிறது நீ எங்கே இருக்கிறாய் என் உடன்பிறப்பே.இப்போது அவரை இடை நிறுத்தியிருக்கிறார்கள்.இடை நிறுத்தாவிட்டால் தவிசாளர் உண்மையாகிவிடுவார் என்பதனால்தான் இந்த வேலை.இன்னும் புரியவில்லையா உனக்கு என் உடன்பிறப்பே.

சரி.தவிசாளர் துரோகிதான்.தலைவனின் கட்டில் சல்லாபங்களை வீடியோ பிடித்து வைத்திருக்கும் அசிங்கமானவர்தான்.கூடவே இருந்து குழிபறிக்கும் எட்டப்பர்தான்.சந்தர்ப்பத்திற்கு மாறும் சகுனிதான்.கூடவே இருந்துவிட்டுக் குத்தும் புரூட்டஸ்தான்.அப்படியென்றால் உனது தலைவன் யார் என் உடன்பிறப்பே?

ஒரு பெண் குளிப்பதைப் பார்த்துவிட்டோமே என்ற குற்ற உணர்வுக்காக மதீனாவின் மலைகளுக்குள் 40 நாட்கள் அழுது கொண்டும்,ஒழிந்து கொண்டுமிருந்த அந்த தலபா இப்னு அப்துர் ரஹ்மானா உனது தலைவன்?

பணமும்,அதிகாரமும்,அழகும் கொண்ட ஸுலைஹா படுக்கைக்கு அழைத்தும் நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் என்று ஒதுங்கிக்கொண்ட யூசுபா உனது தலைவன்?

தன் ஆசைக்கு இணங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 40 தினார்கள் கடன் கொடுத்துவிட்டு அவளை நெருங்கும்போது,அல்லாஹ்வைப் பயந்து கொள்.பிழையான வழியில் என்னைத் தீண்டாதே என்றவுடன் உனக்காக. நடுங்கிக்கொண்டு திரும்பிச்சென்றேன், இறைவா இந்த குகையைத் திறந்துவிடு என்றவுடன் குகை திறந்ததே அந்த மனிதனா உனது தலைவன்?

தவிசாளர் மரத்தின் இலையைக் கொய்த துரோகி என்றால் உனது தலைவன் மரத்தின் வேரைப்பிடுங்கிய துரோகி இல்லையா?எப்படி என்று கேட்கிறாயா என் உடன்பிறப்பே?சொல்கிறேன் கேள்.

தவிசாளர் சொல்வதில் ஒரு துளி உண்மையும் இல்லை என்றால் தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்தியதற்காக அவரின் மீது இன்னேரம் உனது தலைவன் மான நஷ்ட வழக்குப்போட்டிருக்க வேண்டும்.உனது தலைவனை முடியுமென்றால் போடச்சொல் பார்க்கலாம்.

தான் தங்கியிருந்த அறைகளின் திறப்புகளைக் கொடுத்தமைக்காக தவிசாளர் குறிப்பிட்ட அனைத்து ஹோட்டல்களுக்கும் எதிராக உனது தலைவன் மான நஷ்ட வழக்குப்போடமுடியும்.போட்டால் மாட்டிக்கொள்வான்.இதிலிருந்து உனக்குப் புரியவில்லை இதில் உண்மை இருக்கிறதென்று என் உடன்பிறப்பே.

அப்படியென்றால் இது எத்தனை துரோகம்?

பெண்ணாசைக்கு மண்ணை விற்றது எத்தனை துரோகம்.சிந்தித்தாயா என் உடன் பிறப்பே?

முழு முஸ்லீம்கள் நாம் நம்பிக்கொடுத்த தலைமைத்துவத்தை ஒரு தாசியின் முந்தானையோடு முடிச்சுப்போட்டது எத்தனை துரோகம் யோசித்தாயா என் உடன்பிறப்பே?

கிழக்கின் கண்ணீராலும் ரத்தத்தாலும் வளர்த்த கட்சியை விபச்சாரியின் வீதியில் விற்றுவிட்டது எத்தனை துரோகம்?

நீ உயிரைக் கொடுத்து உருவாக்கியதை கேவலம் உடம்பு சுகத்திற்காக உரிமைவிட்டது எத்தனை துரோகம்?

பேருவளையில் எரித்தார்கள்.ஏன் இன்னும் பேசாமல் இருக்கிறார் என்று ஆதங்கப்பட்டாய் அன்று நீ.இப்போதுதானே புரிகிறது. கேவலம் அழுகிப்போகும் சதைக்காகவா உனது தலைவன் அமைதியாக இருந்தான்.

மஹிந்தவிற்கு மூன்றாம் முறை வாய்புக்கொடுக்கும் சட்ட மூலத்திற்கு கையை உயர்த்தினான் உனது தலைவன்.இந்த அநியாயக்காரன் இன்னொரு தடவை வர கை உயர்த்துகிறாரே எனது தலைவன் என்று நீ குழம்பிப்போனாய்.இன்று புரிந்ததா அந்தக் காரணம்?உக்கி மண்ணாய்ப் போகும் உடலுக்காகவா உனது தலைவன் அநியாயக் காரனோடு கைகோர்த்து நின்றான்?

பள்ளிகள் எத்தனையோ உடைந்தபோது அறிக்கையை மாத்திரம் விட்டுவிட்டு அரசாங்கத்தோடே நிற்கிறாரே என்று நீ அங்கலாய்த்தாய்.இப்போது புரிந்ததா உனக்கு ஏனென்று.உப்பி,புழுத்து,எலும்பாகிப்போகும் உடம்புக்காகவா உன்னை விற்றான் உனது தலைவன்?

உன்னைப்போன்ற உன்னதமான ஆத்மாக்களை அலைக்கழித்துவிட்டு உடம்பு சுகத்துக்காக அலைபவனா உனது தலைவன்?

மான் வேட்டைக்குப்போனபோது,மானொன்று அவர் கொம்பைக்கிழித்துவிட்டது.காயத்தை மறைக்க மஹிந்தவிடம் கையேந்தினார்.மஹிந்த அந்தக் காயத்தைக் காட்டியே இவரை மடியில் புதைத்துவிட்டான்.அவன் ஆடு என்றான் இவர் ஆடினார்.அவன் பாடு என்றான் இவர் பாடினார்.இது என்ன மதப்பற்றா என் உடன் பிறப்பே ?தேச பக்தியா? வீர சாகசமா? இது துரோகம் என்று உனக்குத்தெரியவில்லையா?

உன் தவிசாளன் செய்தது தவறு.தலைவன் செய்தது துரோகம்.தவிசாளர் தலைவருக்கு மாத்திரம்தான் தவறிழைத்தார்.தலைவர் முஸ்லிம் சமூகத்திற்கே தவறிழைத்துவிட்டாரே.தவிசாளர் ஒரு பிரதேசத்தின் பிரதிநிதி மாத்திரம்தானே.தலைவன் அனைத்து முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதியல்லவா?

இப்போது சொல் என் உடன்பிறப்பே.யார் பெரிய துரோகி.

தவிசாளர் முஸ்லீம் காங்கிறசின் புத்தகத்தில் தலைவருக்குத் தவறிழைத்தவர் என்று எழுதப்படுவார்.ஆனால் உன் தலைவரோ எமது அரசியல் வரலாற்றில் துரோகியாக பச்சை குத்தப்படுவார்?

இத்தனை பாரதூரத்தை மறந்துவிட்டு,இதுவும் கடந்து போகும் என்று இருக்கிறாயே.இந்த விடயத்திலும் நீ அமைதியாக இருப்பின் நாளை உன் குழந்தையின் பாதுகாப்பு அந்நியனின் அடுப்பங்கரையில் கரிக்கட்டையாய் எரிந்துவிடும் எச்சரிக்கிறேன் உன்னை.

மீண்டும் சந்திப்பேன்.

இப்படிக்கு,
என்றும் உன் உடன்பிறப்பு.

RAAZI MUHAMMADH JAABIR