அடுத்தவர் இஸ்லாத்தை
அறிந்துள்ள முறையினை
நினைக்கும் போது
நெஞ்சு வலிக்கும்
ஏழு கல்யாணம்
ஏலும் என்பார்.
வாளால் வளர்ந்த
வரலாறு என்பார்.
திசையைத் தொழுவதாய்
திரித்துச் சொல்வார்
கசையால் அடிப்பதை
கண்டனம் செய்வார்.
இறைச்சி உண்பது
எமக்குக் கடமை போல்
அரைகுறை அறிவால்
ஆத்திரப் படுவார்.
பெண்ணின் ஆடையை
பிரச்சினையாக்குவார்.
சுன்னத் வைப்பதை
சொல்லி நகைப்பார்.
எம்மவர் செயல்களும்
இதற்குக் காரணம்
சும்மாவேனும்
சொல்லல்ல மார்க்கத்தை.
பிரியாணி காட்டினோம்
பிரியத்தைக் காட்டல்ல
வட்டிலப்பம் கொடுத்து
வட்டிக்கு எடுத்தோம்
இதுதான் இஸ்லாம்னு
இலங்கையில் மக்களுக்கு
பொதுவாகச் சொல்ல
போதாது அறிஞர்
இயக்கச் சண்டையிலே
இருப்பவர் மூழ்க
வியக்க வைக்க
விதண்டா வாதம்.
குறை சொல்விர்க்கு
கோபமாய் பதில் தராது
முறையாய் விளக்க
முயற்சிகள் தேவை…!