சத்திர சிகிச்சைக்கு அவசியமான திரவியங்களை கொள்வனவு செய்வதற்கான விலைமனுக்கோரலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரட்னவால் முன்வைக்கப்பட்டுள்ளது.
சத்திர சிகிச்சைக்கு அவசியமான நுகர்வுப் பொருட்களை பல்வேறு அளவுகளில் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில்,
கொள்முதல் குழுவின் விதப்புரையின் அடிப்படையில் வழங்குவதற்கு அமைச்சர் ராஜிதவால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.