சம்பந்தன் ,சுமந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்துடன் சார்பான அரசியலை முன்னெடுத்துள்ளனர் : சம்பிக்க

சார்பு அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றமையே சுமந்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் பெருநகரம் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சுமந்திரன் போன்றவர்கள் அரசாங்கத்துடன் சார்பான அரசியலை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அவர்களுக்கு எதிரானவர்கள் அவர்களை கொலை செய்ய முயற்சிக்கின்றனர். தமிழ்த் தலைவர்களான நீலன் திருச்செல்வம் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோருக்கும் இதுவே நடந்தது.

இவ்வாறானதொரு நிலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், தமிழ் மக்கள் பிரிவினைவாதத்தின் பின்னால் செல்வதானது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பின்னோக்கியே நகர்த்தும்.

1970ஆம் ஆணடுகளில் தமிழ் சமூகம் கல்வி, பொருளாதார நிலைமை ஆகியவற்றில் உயர்ந்த நிலையில் இருந்தன. பிரபாகரன் பிரிவினைவாத யுத்தத்துக்கு இட்டுச் சென்ற பின்னர் தமிழ் மக்களின் நிலைமையை பார்க்க வேண்டும்.

மீண்டும் தமிழ் மக்கள் பிரிவினை வாதத்தின் பின்னால் சென்றால் ஒட்டுமொத்த தமிழ் சமூகம் மீண்டும் பின்னோக்கியே செல்லும் என்பதில் ஐயமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.