நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக ஆறு இலட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டின் 13 மாவட்டங்கள் இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதனைக் கருத்தில் கொண்டு நீர், மின்சாரம் மற்றும் உணவையும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் மக்களிடம் கோரியுள்ளார்.
இதேவேளை, இன்னும் சில நாட்களில் நாட்டில் நிலவும் வறட்சி மற்றும் குளிரான காலநிலையில் தற்காலிகமாக மாற்றம் ஏற்படும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் காலை வேளையில் பணியுடன் கூடிய காலநிலை நிலவலாம் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.