பொலிஸ் மா அதிபர் நாட்டில் உள்ள சில சட்ட மூலங்களை மீறி செயற்படுகின்றார்:ஜீ.எல்.பீரிஸ்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நாட்டில் உள்ள சில சட்ட மூலங்களை மீறுவதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் தற்போது பொலிஸ் நிர்வாகமானது அச்சுறுத்தலாக காணப்படுவதாகவும், அரசியல் கட்சிகளை மையப்படுத்தி கைதுக்கள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.

அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையும் இதன்போது அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.