ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு அருகில் நேற்று ஏற்பட்ட பதற்ற நிலைக்கு கொழும்பில் இருந்த வந்த சிலரின் செயற்பாடே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அப்படி இல்லை என்றால் நிலைமை இவ்வளவு தீவிரமடைந்திருக்காதென அவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதி, விமான பாலத்திற்கு அருகில், முகாமைத்துவ இடங்கள் மற்றும் பிரதான வீதிகளில் நீதிமன்ற எதிர்ப்பை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நீதிமன்றில் இவ்வாறு தடை உத்தரவு பிறப்பித்திருந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் நாமல் ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தன.
நீதிமன்றில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த வீதிகளில் யாரும் பயணிக்கவில்லை். நீதிமன்ற தீர்ப்பினை மதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டார்கள்.
அரசாங்க நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிடும் மக்களுக்கு பொல்லுகளினால் தான் பதில் கிடைக்கின்றது என நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.