ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலிக்கு தேசியப் பட்டியல் எம்.பி. பதவி வழங்குவதாக உறுதியளித்திருந்தாலும் தற்போது பதவி வகிக்கும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் இதுவரை தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்தாலே ஹசன் அலிக்கு அப் பதவியை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சல்மான் தான் தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்க வேண்டும் என்பதே நடைமுறையாகும்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு முன்பு சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்யாது விட்டால் அது தொடர்பில் கட்சியின் உயர்பீட கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ARA.Fareel