அம்பாந்தோட்டையை விற்று விட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது : நாமல் ராஜபக்ச

அம்பாந்தோட்டையில் 15000 ஏக்கர் நிலப்பரப்பினை சீனர்களுக்கு கொடுப்பதற்கு எதிராக ஓர் வித்தியாசமாக பாதயாத்திரை ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.

நேற்றைய தினம் தங்கல்லை பிரதேசத்தில் தேங்காய்களை தலையில் சுமந்தவாறு சென்ற நூற்றுக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் தங்கல்லை வீதி வழியாக ஊர்வலமாக ஹேனகடுவை விகாரைக்கு சென்று அம்பாந்தோட்டையை மீட்டுத் தருமாறு தேங்காய் உடைத்துள்ளார்கள்.

இந்த பாதயாத்திரையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்து கொண்டு தேங்காய் உடைத்து பிராத்தனையில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அடுத்த வருடத்தின் முதற் பகுதியில் அம்பாந்தோட்டையை விற்று விட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு பதில் கூறப்போகும் அமைச்சர் யார் என்பது தொடர்பில் எமக்கு தெரியவில்லை. அதனை எதிர்ப் பார்த்துள்ளோம் இப்போதைக்கு அனைத்துமே பறிபோய் விட்டது.

என்றாலும் அம்பாந்தோட்டை எமக்கு மீளக் கிடைக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம் என நாமல் தெரிவித்துள்ளார்.