சிறப்பு அதிகாரத்தை வழங்க நாம் எவருக்கும் இடமளிக்க மாட்டோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரத்தைக் குறைக்க நாடாளுமன்றத்துக்கு யோசனை ஒன்றை முன்வைத்த தலைவர்தான் ஜனாதிபதி.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வேறு எவருக்கும் அதிகாரத்தை அதிகரிக்க சந்தர்ப்பமளிக்கப்பட மாட்டாது. நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்கள் தமது செயற்பாடுகளை விரைவாக முன்னெடுப்பதில் சிக்கல் நிலை உள்ளது.
அதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக ஒரு வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம். ஆனால், சிறப்பு அதிகாரத்தை வழங்க நாம் எவருக்கும் இடமளிக்க மாட்டோம். என்றார்.