நாட்டில் தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக ஜனவரி முதலாம் திகதி முதல் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து சிவில் பாதுகாப்பு பிரிவினர் விசேட வேலைத்திட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தொல்பொருட்களைப் பாதுகாப்பது அரசின் பிரதான கடமையாகும். எனவே, அதனைப் பாதுகாக்கும் பொறுப்பை சிவில் பாதுகாப்பு படையினரிடம் நான் ஒப்படைக்கின்றேன்.
நாட்டில் தொல்பொருட்கள் நாசம் செய்யப்படுவது, வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது என பல்வேறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
அதனால், தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து, சிவில் பாதுகாப்பு படையினர் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.
இதனூடாக சிவில் பாதுகாப்பு படையினர் சிறந்த செயற்பாடுகளை முன்னெடுப்பர் என தான் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.