ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த ஆண்டில் முன்னெடுத்த அரசியல் போராட்டங்கள் அனைத்தும் வெற்றி !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது கடந்த ஆண்டில் முன்னெடுத்த அரசியல் போராட்டங்கள் அனைத்தும் வெற்றி அடைந்துள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மத்திய வாங்கியின் முன்னாள் ஆளுநர் தொடர்பான விடயம், தேர்தல் முறையில் ஏற்பட்ட மாற்றம், சிறந்த அமைச்சுப் பதவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் டீல் பற்றிய விடயங்கள் போன்றவை வெற்றியடைந்த விடயங்களாக கருத முடியும்.

மேலும், இந்த தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போவதில்லை.

இருப்பினும் தற்போதைய காலக்கட்டத்தில் சேர்ந்து இருப்பதன் காரணமாக நாட்டில் உள்ள பல பிரச்சினைகளுக்கு அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் பேசும் அதிகாரம் தங்களுக்கு காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள சிலர் தங்களை அரசாங்கத்தினை விட்டு செல்லுமாறு கூறிவருவது, அர்ஜுன் மகேந்திரன் விடயம் மற்றும் சிறந்த அமைச்சுப் பதவியை பெற்றுக்கொள்வது போன்ற சில செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நாங்கள் இடையூறாக இருப்பதே முழுக்காரணம் என டிலான் பெரேரா இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.