பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு விஷேட வேலைத்திட்டம்:அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு

 

-ஊடகப்பிரிவு

பண்டிகக் காலத்தில் அத்தியாவசியப்பொருட்கள் உட்பட ந்தப் பொருளுக்கும் தட்டுப் பாடுஏற்படாது நுகர்வோருக்கு நன்மையளிக்கும் வகையில்அரசாங்கம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துஅதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும்பொருட்களின் விலைகளை வேண்டுமென்று அதிகரித்துவிற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கெதிராக உரியநடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நுகர்வோர்பாதுகாப்பு அதிகாரசபை நாடுமுழுவதிலும் திடீர்சுற்றுவளைப்புக்களை மேற்கொண்டு சட்டத்தை மீறும்வர்த்தகர்களுக்கெதிராக உரிய நடவடிக்கைகளைஎடுக்குமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

இதேவேளை சந்தையில் அரிசி விநியோகத்தை தாராளமாக்கிவிலை அதிகரிப்பை தடுக்கும் வகையில் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் அமைச்ச்சரவைக்கு முன்வைத்த யோசனைகளுக்குஅமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.