48 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்ட போது ஔடத நிறுவனங்கள் மூலம் ஏற்பட்ட அழுத்தங்களை விட அதிகளவில் அழுத்தங்களை எதிர்பார்த்ததாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகின்றார்.
ஒரு ஆண்டுக்கு சுமார் 06 பில்லியன் பெறுமதியான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அந்த மருந்துகளில் வைத்தியசாலைகளுக்கு வழங்கும் மருந்துகளின் அளவை கணக்கிடுவதற்கான முறை ஒன்று இதுவரை இருக்கவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அதற்காக புதிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்தியசாலைகளுக்கு பற்றாக்குறை இன்றி மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சில சமயங்களில் சுகாதாரத் துறைக்காக சரியான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் எடுக்கப்படுகின்ற சில தீர்மானங்கள் காரணமாக சிலருக்கு கமிஷன் பணம் இல்லாது போயுள்ளதாக கூறியுள்ளார்.
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் விநியோக பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதே சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு கூறினார்.