வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றி ஹக்கீம் வெளிப்படையாக கதைக்காமையின் காரணம் தான் என்ன..?

 

இப்றாஹிம் மன்சூர்

அமைச்சர் ஹக்கீம் வடக்கு-கிழக்கு இணைப்பு பற்றி வெளிப்படையாக கதைக்காமையின் காரணம் என்ன என்ற வினாவிற்கான விடையை முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீன்  இன்று 16-12-2016ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெளிச்சம் நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.அதில் அவர் தென் மேல் மாகாண சிங்கள மக்கள் அதற்கு எதிர்ப்பாக இருப்பதன் காரணமாக அவர்கள் அது பற்றி எதுவுமே கூற மாட்டார்கள்.

இவர் கூறியது போன்று அமைச்சர் ஹக்கீமும் இவ்விடயத்தில் மௌனியாகத் தான் இருக்கின்றார்.தற்போது முஸ்லிம்களிடையே உள்ள ஏனைய கட்சித் தலைவர்களான அமைச்சர் றிஷாதும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வும் தங்களது நிலைப்பாட்டை பகிரங்கமாக கூறுகின்றனர்.அமைச்சர் அதாவுல்லாஹ் இதனை வைத்து பாரிய அரசியலும் செய்து வருகின்றார்.அது மக்களிடையே தாக்கம் செலுத்தியும் வருகிறது.இந் நிலையிலும் அமைச்சர் ஹக்கீம் பேசவில்லை என்றால் அங்கு ஏதோ உண்மை மறைந்துள்ளமை தெளிவாகிறது.அது தான் என்ன என்பதற்கு தமிழ் டயஸ்போறாக்களிடமும் அடிபணிந்து விட்டார் போன்ற பல பதில்கள் இருந்தாலும் முன்னாள் பிரதி அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் பதிலும் கவனத்திற்கொள்ளத்தக்கது.