மலேசியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளார்.
இதில் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கைகளாக கைச்சாத்திடும் ஒப்பந்தங்களே இவை –
1. உல்லாசப் பிரயாணம் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலான ஒப்பந்த.
2. பயிற்சியளித்தல், ஆராய்ச்சி மற்றும் அரச நிர்வாக துறைகளில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பிலான ஒப்பந்தம்
3. இலங்கையில் கமத்தொழில் ஆராய்ச்சிக் கொள்கைக்கான மன்றத்திற்கும் மலேசிய கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4. இலங்கையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கும் மலேசியாவின் பெருந்தொட்டக் கைத்தொழில் மற்றும் வியாபாரப் பொருட்கள் அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
5. கலாச்சாரம், கலைகள் மற்றும் மரபுரிமைத் துறையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலான ஒப்பந்தம்.
6. இளைஞர்களின் அபிவிருத்தி துறையில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலான ஒப்பந்தம்.
குறிப்பிட்ட ஆறு ஒப்பந்தங்களிலேயே ஜனாதிபதி கைச்சாத்திட உள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவினால் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.