உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -2016 ன் இரண்டாம் நாள் பம்பலபிட்டியில் இன்று..

 

அஷ்ரப் ஏ சமத்
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -2016 இரண்டாம் நாளின் காலை அமா்வு பம்பலப்பிட்டி சுபுட் மண்டபத்தில்   நடைபெற்றது. இங்கு  காலை 09.00 மணி முதல் 01.00 மணிவரை  5 அரங்குகள் குழுக்களாக நடைபெற்றன. 400க்கும்  மேற்பட்ட இலங்கை மற்றும் வெளிநாட்டு பேராளா்கள் கலந்து கொண்டனா்.  சிலா் தமது விவதாங்களை நோக்குணா்கள் முன் வைத்தனா்.
collage_fotor-4
இஸ்லாமும் கலைகளும் – வி.ஏ கபுர் -ரைத்தளாவளை அஸீஸ் அரங்கு,   எச்.எம்.பி மொஹிதீன்- மருதுாா்க் கனி அரங்கு  பேராசிரியா் சபா ஜெயராசா, பேராசிரியா் ரமீஸ் அப்துல்லாஹ்,  ஆ.கா.அ. அப்துல் ஸமது- வித்துவான் எம்.ஏ. ரகுமான் அரங்கு   மற்றும் நீதிபதி இஸ்மாயில்- எஸ்.எச்.எம் .ஜெமீல் அரங்கு – சட்டத்தரணி ஜி. இராஜகுலேந்திரன், கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் மற்றும் அன்பு முகையதீன்- ப. ஆப்தின் அரங்கில் – திக்குவளை கமால், முனைவர் பரிதா பேகம், முனைவா் ஜவாத் மரைக்காா், சதக்கத்துல்லாஹ்  ஆகியோா் தலைமைகளில் அரங்குகள் நடைபெற்றன.