க.கிஷாந்தன்
1956 ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தோட்ட மக்களின் நலன் கருதி செயற்பட்டதும் 1994 ஆண்டு தோட்ட மக்களுக்கென ஒரு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை உருவாக்கியதும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியே அந்த கட்சியின் உள்ள ஜனாதிபதி யாப்பு ரீதியாகவும் எதனையும் செய்யக்கூடிய சிறந்த பெரிய ஜனாதிபதி என்றால் அது மிகையாகாது அவர் தோட்ட மக்கள் மீது மிகவூம் கரிசனை கொண்டவர் தோட்ட மக்கள் தனது வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு கல்வி ரீதியாக முன்னேறி இந்த நாட்டின் ஏனைய சமூகங்களைப் போல் வாழவேண்டும் என்று நினைப்பவர் எனவே தான் தோட்டப்பாடசாலைகளின் அபிவிருத்திக்கு என பாரிய அளவில் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு தோட்ட பாடசாலையில் நிலவிய ஆசிரியர் குறைபாட்டினை நீக்கப்பட்டு இன்று மாணவர்கள் கல்வி ரீயாக முன்னேறி வருகிறார்கள் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் தமது பெற்றோரைப்போல் இல்லாமல் கல்வி கற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சதந்திரக்கட்சியின் புதிய கிளைக்காரியாலயம் ஒன்று 11.12.2016 அன்று காலை அட்டன் நகரில் முதலமைச்சர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.அதனை தொடர்;ந்து அட்டன் நகர சபையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்நது உரையாற்றுகையில்,
தோட்டத்தொழிலாளர்கள் ஏனைய சமூகங்களைப் போல் வாழ வேண்டும் அதற்கு நாம் பிரிந்து நின்று போராட்டம் செய்து எமது உரிமைகளை வென்றெடுக்க முடியாது நாம் அனைவரும் ஒன்று பட்டு செயப்படுவதன் மூலம் எமது உரிமைகளை பெற்றுக்கொள்ளலாம் இன்று நாங்கள் தமிழ் முஸ்லிம் சிங்களவர் என பார்ப்பதில்லை யாவரும் இலங்கையர் என்ற கண்ணோட்டத்திலேயே செயப்படுகின்றோம்.
இந்நிகழ்வுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்களின் தலைவர் லெஸ்லி தேவேந்திர நுவரெலியா மாவட்ட அமைப்பாளர்களான வைத்தியர் தர்மபிரிய, ரொசான் குணவர்தன, டபிள்யூ.ஜே.ரணசிங்க, பெரியாசாமி பிரதீபன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.